அமெரிக்காவில் ஒருவர் மேற்கொண்ட கொரோனா பரிசோதனைக்கு கட்டணமாக 54,000 டாலர் வசூலிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நகரில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் டிராவில் வார்னர். இவர் கொரோனா பரிசோதனைக்காக Lewisville’s SignatureCare என்ற மருத்துவ அவசர மையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் தனக்கான கொரோனா பரிசோதனை மேற்கொண்டு ரிசல்ட்காக காத்து கொண்டிருந்தார். அப்போது ரிசல்ட்டை பார்த்த டிராவில் வார்னர் அதிர்ச்சியில் மூழ்கினார்.
அந்த நபருக்கு PCR பரிசோதனைக்காக 54,000 டாலர் கட்டணமாக கேட்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே ஒரு கொரோனா டெஸ்ட்க்கு இந்திய மதிப்பில் 40 லட்சம் ரூபாய் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஏற்கனவே இது போல அமெரிக்காவில் கொரோனா பரிசோதனைக்காக அதிக அளவு பணம் வசூலிக்கப்பட்டதாக பல நிகழ்வுகள் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை செய்ய 8 டாலர் முதல் 15 டாலர் வசூலிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிகழ்வு பில்லிங் போடும் போது தவறுதலாக இடம்பெற்று இருக்கலாம். அதுவும் இது உடனே கவனிக்கப்பட்டு சரி செய்யபட்டுள்ளதாக மருத்துவ நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது