கனவின் விளைவு: நாவல்பழத்தைக் கண்டால்…!

Published:

dream-1

தவயோகச் செல்வர்களைக் கனவில் காண்போர், பொதுநல தொண்டில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள்.

தவம் செய்வதாக கனவு கண்டால் இறை அருள் உண்டாகும். உடலுறுதி ஏற்படும். செல்வமும் செல்வாக்கும் மேம்படும்.

தவளைகளைக் கனவில் காண்பது நல்லது. தொழிலில் அபிவிருத்தி ஏற்படக் கூடும்.

தவளைகளைப் பிடிப்பதாகக் காண்பதும் நல்லதே விளைவிக்கும்.

ஆனால், தவளைகள் கத்துவதாகக் கனவு காண்பது கெடுதலாகும்.

மங்கலநாணை கனவில் காண்பது, மேலான பதவிகளைக் கொடுக்கும்; பண வசதியை உண்டாக்கும்; மணமாகாதவர்களுக்கு மணம் நிகழ வைக்கும்.

தித்திப்பு உணவை உண்பதாகக் கனவு கண்டால் தொழில் உயர்வும், பண வரவும், நண்பர் சேர்க்கையும் உண்டாக்கும்.

கனவில் தீக்குச்சி சம்பந்தப்பட்டவை தோன்றின் திடுக்கிடத்தக்க செய்திகள் வரக்கூடும்.

துணிகளை வாங்குவது போல கனவு வந்தால், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் எண்ணியவை இனிதே நிறைவேறும்.

கனவில் தொழிற்சாலையைக் காண்போருக்கு பரம்பரைச் சொத்து வரக்கூடும்.

நாம் தோட்டம் ஒன்றில் உலாவுவது போல் கனவு கண்டால், மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

கனவில் நண்டைக் கண்டால் முயற்சிக்கும் செயல்களில் பல இடையூறுகள் இன்னல்கள் உண்டாகும். அச்செயல் வெற்றி பெறாது போகக்கூடும். கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டைக் காண்பது, கப்பலுக்கு பேராபத்தாக முடியும்.

கனவில் நாவல் பழத்தைக் கண்டால், காரிய ஸித்தி ஏற்படும். தன சம்பத்தும், சந்தான சம்பத்தும் மிகுந்திடும்.

கனவில் இந்த வைபவத்தைக் காண்பது நல்லது. மணம் ஆகாதவர்கள், இந்த வைபவத்தைக் கனவில் கண்டால், விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடந்தேறும்.

நீதிமன்றத்தைக் காண்பதாகவோ, நாம் நீதிமன்றத்தில் இருப்பதாகவோ கனவு கண்டால், வழக்குகளை எதிர்கொள்ளவோ அதனால் செலவுகளை ஏற்கவோ நேரிடும்.

நெசவு தொடர்பான கனவுகள், நன்மை அளிக்கும்.

தோன்றும்……

Related articles

Recent articles

spot_img