
தலைசுற்றல், மயக்கம் ஆகியவை, மூளை சார்ந்த பாதிப்பாக இருக்கலாம். பக்கவாதம் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.
காலம் தாழ்த்திச் சென்றால் சிக்கலாகிவிடும். புகை, மது தவிர்த்தல், தினமும் பழம், காய்கறி சாப்பிடுதால் மூளை பாதிப்பு வராமல் தப்பலாம்.
மொழித்திறன், செயல்திறன், புலனறிவு, நினைவாற்றல் ஆகியவற்றுக்கு, மூளையின் இயக்கமே காரணம். விரிவாக சொல்வது என்றால், அன்றாட அடிப்படை திறமை சார்ந்த மற்றும் ஓய்வு சார்ந்த வேலைகளை, சரியாக, சீராக, முறையாக செய்தல்; அறிதல் மற்றும் புரிதல் திறனுடன் சூழ்நிலைக்கேற்ப செயல்படுதல்; உடல் மற்றும் புலன் ஆகியவை முழுமையாக இயங்க, மூளையின் செயல்பாடு முக்கியம்.
உடலில் ஆக்சிஜன் மற்றும் குளூக்கோஸ் அளவு குறையும்போது, மூளையில் உள்ள செல்கள் இறக்க நேரிடுவது; மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவது ஆகியவை, பக்கவாதம் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. இறப்புக்கான காரணமான நோய்களில், இது, மூன்றாவது இடத்தில் உள்ளது. 6 நொடிக்கு ஒருவர் என, ஆண்டுக்கு, 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில், 15 முதல் 30 சதவீதம் பேர், படுத்த படுக்கையாகி விடுவர். இந்த நோய் பாதித்தால் உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச் சத்து அதிகமாகி உடல் எடை கூடுதல், குடிப்பழக்கம், மன அழுத்தம் பேன்றவை, இதற்கு காரணம்.
தலைவலி, தலைசுற்று, மயக்கம், வலிப்பு நோய், பக்கவாதம், மூளை நரம்பு ஒவ்வாமை, அங்க அசைவு நோய்கள், ஞாபக மறதிநோய், தொற்று நோய்கள் மற்றும் மரபணு குறைபாடுகள்.
மறதி நோய் என்பது, 60 வயதிற்கு மேலான முதியோரை தாக்கும். ஞாபக சக்தி, கொஞ்சம் கொஞ்சமாக குறையும்; சரியான புரிதல் திறன் இருக்காது. இதய நோய் தாக்குதலுக்கு காரணமான, ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்பு, கொழுப்புச் சத்து, அடிபட்டு தலையில் காயம் ஏற்படுதலாலும், இந்த நோய் வருகிறது. நம் மூளையின் திறனை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். அதாவது படித்தல், அதிகமாக அறிதல் திறனை வளர்ப்பது, மறதி நோயைத் தடுக்க உதவும்.
தூக்கமின்மை மூளை சார்ந்த நோய் தான். ஐந்து பேரில் ஒருவர், தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்கா விட்டால் எரிச்சல், சரியான அளவு திறனை வெளிப்படுத்தாமையுடன், வேலைத் திறன் குறைவதோடு, விபத்துகளுக்கும்
வழிவகுக்கும்.
தூக்கமின்மையால், இதய நோய், பக்கவாதம் போன்ற வியாதிகள் வரவும், வாய்ப்புகள் அதிகம். தூங்க முடியாத பட்சத்தில், காபி, டீ, மது பானங்களை, அறவே தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு, நான்கு மணி நேரத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் இருப்பது அவசியம். படுக்கை அறையில், ‘டிவி’ பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தினமும், ஆறு மணி முதல் எட்டு மணி வரை கட்டாயம் தூங்க வேண்டும்.
போதையேற்றினால் மூளை சுறுசுறுப்பாக இருப்பதாக, கூறுவது முற்றிலும் தவறான தகவல். 12 முதல் 30 வயது வரை உள்ளோர், மது பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த வயதில் ஏற்படும் பழக்கம், 65 வயதிற்கு மேல் தான் குறைகிறது. கல்லூரி மாணவர்கள், மதுவை ஒரு நாகரிக பானமாக கருதி, குடிக்கின்றனர். மது மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையற்ற மனக் குழப்பத்தை உருவாக்கும். வேலைத் திறன் மற்றும் படிப்பாற்றலைக் குறைக்கும்.
ஆண்டுதோறும், 20 லட்சம் மக்கள், விபத்துகளில் சிக்குகின்றனர். அதில், 10 லட்சம் பேர் இறக்கின்றனர். மது அருந்தி விபத்துக்குள்ளானோர், 20 சதவீதம் பேர். 10 நிமிடத்திற்கு ஒரு நபர், மூளைக் காயத்தால் இறக்கிறார். விபத்துகளில் சிக்கி, தலையில் பலத்த அடி ஏற்பட்டால், மூளை பெரிதாக பாதிக்கப்படுவதே, இறப்புக்கு காரணம்.தலைக்கவசம் அணிவது, மது குடித்து போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, சாலை விதிகளை சரியாக கடைபிடிப்பது, அதிவேக பயணம் செய்வதை கட்டுப்படுத்துவது ஆகியவை மூலம், இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
பல்வேறு நோய்களால் மூளை பாதிக்கப்படும்போது, நமது உடலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. அப்படியானால் வேலை செய்ய முடியாது. குடும்பத்தில் வறுமை, நிதி நெருக்கடி, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்று சமூக பொருளாதார பிரச்னைகள் எழுகின்றன. எனவே, நிரந்த ஊனத்தை தவிர்க்க, முறையான மூளை பாதுகாப்பு அவசியம்.
மூளையை பாதுகாக்க அன்றாட உணவில், காய்கறி, பழங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல்; அன்றாட உடற்பயிற்சி செய்தல்; மன அழுத்தம் தவிர்த்தல்; புகை, புகையிலை, போதை மருந்து, மது வகைகளை தவிர்த்தல் ஆகியவை, மூளை பாதிப்பு வராமல் தடுக்கும்.
தலை சுற்றல், மயக்கம் வந்தால், முறையான மருத்துவ ஆலோசனை பெறுதலும், மூளையை பாதுகாக்க உதவும்.
மூளையில் அதிகமான இரத்தம் இருந்தால் ரத்தக்கசிவு ஏற்படுகிறது, இதற்கு இரத்தப்பெருக்கு என்று பெயர் (hemorrhagic stroke), இந்த இரத்தப்பெருக்கு மூளையில் சிதைவுகள் அல்லது இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
அடுத்தவகையாக மூளையில் குறைவான அளவு இரத்தம் இருப்பதன் காரணமாக ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதன்று ischemic stroke என்று பெயர்.
இதன் வகையால் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு ரத்தசெல்கள் இறந்துவிடுகின்றன, 85 சதவீதம் பேர் இந்தவகையால் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
இதன் அறிகுறிகள் என்னவென்றால், தாங்கமுடியாத தலைவலி, முகம் மற்றும் கண்களிக்கிடையே வழக்கத்திற்கு மாறான வலி ஏற்படுதல்.
பார்வைத்திறன் குறைதல், ஒரு பொருளை பார்க்கும்போது மங்கலாக தெரிவது அல்லது இரண்டாக தெரிவது.
பலவீனம், அசைவின்மை மற்றும் உடலின் ஒரு பக்கத்தின் உணர்வின்மை.
செய்யும் செயல்களை ஒருங்கிணைக்க இயலாமல் திணறுதல்.
பொதுவாக ரத்தக்கசிவு நோயானது உடலில் எவ்வித முன்னெச்சரிக்கையும் கொடுப்பதில்லை.
அறிகுறிகளை வைத்து மூளையில் மாற்றங்கள் இருப்பதை CT ஸ்கேன் அல்லது MRI ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கலாம்.
நம் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் இதிலிந்து காத்துக்கொள்ளலாம், சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது, குறிப்பிட்ட அளவில் ஆல்கஹால் அருந்த வேண்டும்.
அதிக அளவு கொழுப்பான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம், மேலும் உப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
கண்களை மூளையோடு இணைக்கிற பகுதியான ஆப்டிக் நரம்பை வைத்தே மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைக் கண்டுபிடித்துவிட முடியும். மூளையில் அழுத்தம் அதிகமானால், சிறிய குழந்தை களுக்குத் தலை வீங்கிக் கொண்டே போகும்.
அதன் பெயர் ஹைட்ரோகெபலாஸ்(Hydrocephalus) ஆப்டிக் நரம்பு வீங்கும். அதற்கு ஆப்டிக் டிஸ்க் இடிமா(Optic disc edema (Papilloedema) என்று பெயர். இதை பாப்பிலிடிமா என்றும் சொல்வதுண்டு. பாப்பிலா என்றால் ஆப்டிக் நரம்பு என்று எளிமையாக நினைவு வைத்துக் கொள்ளலாம். இது இரண்டு கண்களையும் பாதிக்கும்.
இதற்கு மூளையில் உள்ள பிரஷரை குறைப்பதுதான் முதல் சிகிச்சை. குழந்தை கள், பெரியவர்கள் என யாருக்கு வந்தாலும் இதுதான் தீர்வு. சில நேரங்களில் அறுவை சிகிச்சைகூட தேவைப்படலாம். கட்டியினால் பிரஷர் அதிகமானால், அதை அறுவை சிகிச்சையோ, கீமோதெரபியோ, ரேடியேஷனோ கொடுத்துக் கரைக்க வேண்டியிருக்கும். அப்போது இந்த பிரஷர் தானாகக் குறைந்துவிடும்.
குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, அதனால் கண்களை, மூளையோடு சேர்க்கிற பகுதி வீங்கும்போது ஒரு கண்ணை மட்டுமே பாதிக்கும். ரத்த அழுத்தம் மிக அதிகமானால் இரண்டு கண்களிலும் ஆப்டிக் டிஸ்க் இடிமா வரலாம்.
ஆக்சிஜன் சரியாகக் கிடைக்காமல், மூளையில் பிரஷர் அதிகமாகும். அதற்கு ஹைப்பாக்சிக் இஸ்கிமிக் என்கெஃபலோபதி என்று பெயர். Hypoxic ischemic encephalopathy என்ற இந்த பிரச்னையை சுருக்கமாக ஹெச்.ஐ.ஈ என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அறுவை சிகிச்சையில் மூளையில் உள்ள தண்ணீரை எடுத்துவிட்டு ஒரு குழாய் மாதிரியான அமைப்பு வயிற்றுக்குள் விடப்படும். ஆனால் ஆப்டிக் நரம்பு சிதைந்துவிடும். அதை ஆப்டிக் அட்ரோஃபி என்கிறோம்.ODD எனப்படுகிற ஆப்டிக் டிஸ்க் ட்ரூசன் என்கிற பிரச்னை மற்றும் ப்ளஸ் பவர் அதிகமிருந்தால்கூட கண்களை மூளையுடன் சேர்க்கிற பகுதி வீங்கினாற் போலத் தெரியலாம். இதனால் சில நேரங்களில் கண்களில் மாலைக்கண் பிரச்னை வரலாம். தலைவலி இருக்கலாம். ஆனால் அது பயப்படுகிற அளவுக்குப் பெரிய பிரச்னை அல்ல.
அதிக தலைவலி.. கண்ணாடி போட வேண்டும் என வருகிறவர்களுக்கும் விழித்திரையைப் பரிசோதித்துப் பார்க்கும்போது கண்களை மூளையுடன் சேர்க்கிற பகுதியில் வீக்கம் தெரியும். அது மூளையில் உருவாகியிருக்கும் கட்டியாகவும் இருக்கலாம். எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன் மூலம் அதைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். சாதாரண தலைவலி என வந்த பலருக்கும், அப்படி கட்டியைக் கண்டுபிடித்து, அவர்களது கண்களையும்
உயிரையும் காப்பாற்றி இருக்கிறோம்.
அதனால்தான் உடலுக்குள் நடக்கும் விஷயங்களைப் பிரதிபலிக்கிற கண்ணாடி என கண்களைச் சொல்கிறோம். விழித்திரையைப் பரிசோதித்து, ஆப்டிக் நரம்பையும் பார்த்து, மூளையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவே அவர்களுக்குத் தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டதைக் கண்டுபிடிக்க முடியும்.
பிட்யூட்டரி சுரப்பியில் ஏதேனும் பிரச்னைகள் வந்தால் முதல் அறிகுறி தலைவலியாகவே வெளிப்படும். பக்கவாட்டுப் பார்வையிலும் பிரச்னைகளை உணர்வார்கள். கண்களை மூளையுடன் இணைக்கிற பகுதியில் நிச்சயம் வீக்கமும் இருக்கும். நீரிழிவினாலும், கண்களை மூளையுடன் இணைக்கிற ஆப்டிக் நரம்புக்கு ரத்தம் சப்ளை செய்கிற குழாயில் அடைப்பு இருந்தாலும், கண்களை மூளையுடன் சேர்க்கிற ஆப்டிக் நரம்பு பகுதி வீங்கும். இது ஒரு கண்ணை மட்டும் பாதிக்கும்.
மூளையில் பிரஷர் அதிகமாவதால் ஆப்டிக் நரம்பு வீங்கும்போது, அதன் பாதிப்பு 2 கண்களிலும் இருக்கும். ஒரு கண்ணில் மட்டும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஆப்டிக் நரம்பு பாதிக்கப்படுவதன் பெயர் இஸ்கீமிக் ஆப்டிக் நியூரோபதி.