இந்த 5 நாட்கள் வெளியே வராதீர்கள்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published:

meteorological centre
meteorological centre

தமிழகத்தில் சில நாட்களாகவே அதிகமான வெயில் ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்று மக்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் 20 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 வரை டிகிரி செல்சியல் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

வெயில் மற்றும்அனல்காற்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 வரை அதிகரிக்கவாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் அரசியல் காட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தைத் தவிர்க்குமாறு வேட்பாளர்கள் மற்றும் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img