எது எப்படியோ இது போதும்.. புதினா வடாம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
mint - 2026

புதினா வடாம்

தேவையானவை:
இட்லி அரிசி – ஒரு கப்,
ஜவ்வரிசி – கால் கப்,
பச்சை மிளகாய் – 4,
புதினா (ஆய்ந்தது) – அரை கப், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கல் உப்பு – 2 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து, களைந்து, மையாக அரைக்கவும். 2 மணி நேரம் ஜவ்வரிசியை ஊறவைக்கவும். புதினா, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் (7-8 டம்ளர்) ஊற்றி கொதிக்கவிடவும். அதில் ஜவ்வரிசியைப் போட்டு வேகவிடவும். அரைத்து வைத்த அரிசி மாவு, புதினா விழுது ஆகியவற்றை இதனுடன் சேர்த்துக் கிளறவும் (கட்டித்தட்டாதவாறு, அடிபிடிக்காதபடி, கைவிடாமல் கிளறவும்). நன்றாக வெந்ததும் இறக்கவும்.

மாவை பிளாஸ்டிக் ஷீட்டில் கரண்டியால் வட்டமாக ஊற்றி, வெயிலில் காயவிட்டு, மாலை அதை உரித்து திருப்பி போட்டு, காயவிடவும். 2-3 நாட்கள் வெயிலில் காயவிட்டு எடுத்து, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.