Homeநலவாழ்வுஆ..! வாய் பிளக்க வைக்கும் பயன்கள் கொண்ட ஆமணக்கு!

ஆ..! வாய் பிளக்க வைக்கும் பயன்கள் கொண்ட ஆமணக்கு!

castrol
castrol

ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும்.

வேர் வாதநோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும்; வறட்சியகற்றும்.பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும் ‌பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ அல்லது குறுமரங்களாகவோ வளரும் இயல்புடையது. கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகளை மாற்றடுக்கில் கொண்ட, சாம்பல் நிறமான பூக்களையுடைய, 10 அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.இலைகள் மிகப் பெரியதாகவும், அகன்றும், மேற்பகுதி வட்டமாகவும், தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாகவும் காணப்படும். எளிதில் உடையக்கூடிய தண்டுக் கட்டையைக் கொண்டது.

முட்களுடன் கூடிய காய்ந்தால் வெடிக்கக்கூடிய காய்களை உடையது. பழங்கள் கூர்மையான 6 பிரிவாகப் பிரிக்கப்பட்டவை.விதைகள் நீள்வட்டமானவை. ஏரண்டம், சித்திரம், தலரூபம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு. விதைக்கு முத்துக்கொட்டை என்கிற பெயரும் உண்டு.

தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகின்றது.

விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது. இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை.

பழங்கால இலக்கியங்களில், இத்தாவரத்தின் அமைப்பைக் குறிக்கும் வகையில் சித்ரபீஜ (அழகான விதைகள்), பஞ்சாங்குல (உள்ளங்கை போன்ற இலைகள்), வாதாரி (வாதத்திற்கு எதிரி) ஆகிய பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன. சிற்றாமணக்கிற்கும் பேராமணக்கிற்கும் உள்ள முக்கிய வேற்றுமை அவற்றின் கொட்டைகளின் அளவைப் பொறுத்தது.

சிற்றாமணக்கு சிறிய அளவுள்ள கொட்டையும், பேராமணக்கு பெரிய அளவுள்ள கொட்டையும் கொண்டது. இந்த இரண்டு வகைகளுக்கும் மருத்துவப் பயன் ஒன்றுதான் என்பதாகவே பெரும்பாலான மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். சிவப்பான விதை மூலமாக செல்வாமணக்கு என்கிற மூன்றாவது வகை பிரித்தறியப்படுகின்றது.

விளக்கெண்ணெய் ரிங்கினெக்கிக் அமிலம், மோனோசேச்சுரேட் கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. இந்த எண்ணெய்க்கு மணம், சுவை என்று எதுவும் கிடையாது. சிலர் இது பூஞ்சை மணம் உடையது என்கின்றனர் சில ஆராய்ச்சிகள் இந்த விளக்கெண்ணெய்யில் உள்ள காம்டோஜெனிக் இருப்பது நம் சருமத்திற்கு நல்லது என்றும் இதை முகத்திற்கு அப்ளே செய்தால் சரும துளைகளை போய் அடைக்காது என்றும் கூறுகின்றனர்.

மருத்துவ பயன்கள்:
ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி, பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும்.

ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் மட்டும் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய மஞ்சள் காமாலை குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் கடைபிடிக்க வேண்டும்.

3 தேக்கரண்டி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து உள்ளுக்குள் கொடுக்க மலச்சிக்கல் தீரும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் 2 டம்ளர் மோர் குடிக்கலாம்.

ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.

4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுகபேதியாகும். சிறுவர்களுக்கு இந்த அளவில் பாதியும், கைக்குழந்தைகளுக்கு இந்த அளவில் நான்கில் ஒரு பங்கும் தரலாம். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க பசுமையான ஆமணக்கு இலையை நெய் தடவி, அனலில் இலேசாக வதக்கி, இளஞ்சூடான நிலையில் மார்பில் வைத்துக் கட்டலாம். விளக்கெண்ணெயில் உயர்தரமானது பழுப்பான வெண்மை நிறமாகவும், நல்ல மணத்துடன் கூடியதாகவும், படிவுகள் அற்றதாகவும் இருக்கும்.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.

ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும்.

பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம்.

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.

மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டுவர வேண்டும்.

castrol oil
castrol oil

சில பெண்களுக்கு குறித்து கொடுத்த நாட்களிலிருந்து பிரசவம் தள்ளிப் போகும். அந்த மாதிரியான பெண்களுக்கு விளக்கெண்ணெய் ஒரு சிறந்ததீர்வு. இது மலமிளக்கி என்பதால் குடலை முழுவதுமாக சுத்தப்படுத்தி வெளித் தள்ளுகிறது. இதனால் கர்ப்பபை எரிசலூட்டப்பட்டு அதன் தசைகள் சுருங்கி விரிய ஆரம்பிக்கிறது. நீங்கள் விளக்கெண்ணெய் குடித்த 24 மணி நேரத்தில் பிரசவ வலி வர வாய்ப்புள்ளது. மருந்தே இல்லாமல் பிரசவ வலியை தூண்டும் பொருள் என்று அழைக்கின்றனர். நாட்கள் தள்ளிப் போகும் இரட்டை குழந்தைகள் பிரசவ வலியைக்கூட தூண்ட உதவுகிறது. மேலும் உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த விளக்கெண்ணெய் முறையை கடைசி மாதத்தில் (41 வது வாரத்தில்) இருந்து செய்யலாம். இந்த முறையை பின்பற்றுவதற்கு முன் உங்க மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

நம் சருமம் வயதாக முக்கிய காரணம் சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவது தான். இதனால் சரும சுருக்கம், கோடுகள் இவையெல்லாம் வரத் துவங்கின்றன. ஆனால் விளக்கெண்ணெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. எனவே தினமும் காலையில் கண்களை சுற்றி, வாயை சுற்றி, கன்னம், கழுத்து இந்த பகுதிகளில் விளக்கெண்ணெய்யை தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவி விடுங்கள். உங்க சருமம் இளமையாக தென்படும்.

குறிப்பு
இதுவே சருமத்தில் அழற்சி உண்டான அரிப்பு, சிவத்தல், வீக்கம், சரும வடுக்கள் ஏற்பட்டால் அதை போட வேண்டாம். ஒரு முறை கையில் தடவி ஒத்துக் கொள்கிறதா என்று செக் பண்ணிக் கொள்ளுங்கள்.

இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் தழும்புகள் மற்றும் பருக்களை மறைய வைக்க உதவுகிறது. ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து வெதுவெதுப்பான நீரில் முக்கி அதில் இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இப்படியே செய்து வரும் போது, முகத்தழும்புகள் மறைந்து விடும். கர்ப்ப கால ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்யை போக்க கூட இதை அப்ளே செய்யலாம். விளக்கெண்ணெய்யில் சூரிய ஒளியை தடுக்கும் SPF – 6 ல் உள்ளது. இது சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. எனவே வெளியே செல்லும் போது விளக்கெணண்ணையை தடவிச் செல்லுங்கள். அதே மாதிரி காயங்களை குணப்படுத்த, பாதிக்கப்பட்ட சரும செல்களை ஆற்ற, இரத்த ஓட்டத்தை சீராக்க போன்றவற்றிற்கும் விளக்கெண்ணெய் உதவுகிறது. உடம்பில் எதாவது கொப்புளங்கள், எரிச்சல் இருந்தால் போக்கி விடும்.

இதிலுள்ள ரிச்சினோச் அமிலம் வலி மற்றும் அழற்சியை போக்க கூடியது. இதனால். எக்ஸிமா, சோரி போன்ற பிரச்சினைகளை களைகிறது. சோரியாஸிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற வறண்ட சருமத்தால் ஏற்படும் நோயை விளக்கெண்ணெய் மூலம் சருமத்திற்கு ஈரப்பதமூட்டி சரி செய்யலாம். எனவே பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் படுப்பதற்கு முன் விளக்கெண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். கேண்டிடா பூஞ்சை தொற்று, மெலாஸ்மா போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. இதிலுள்ள அன்டர்டிசயினிலிக் அமிலம் படர்தாமரையை போக்குகிறது. இந்த சுாரியாஸிஸ் பிறப்புறுப்பு மருக்கள் உடலின் அதிகப்படியான வெப்பத்தால் கூட எளிதில் குணமாகாமல் இருக்கலாம். அதற்கு சிறந்த தீர்வாக இந்த விளக்கெண்ணெய் பயன்படும்.

​பிறப்புறுப்பு மருக்கள் நீங்க
தினமும் மருக்களின் மீது விளக்கெண்ணெய் தடவி வந்தால் கொஞ்ச நாட்களில் அவை காய்ந்து உதிர்ந்து விடும் என்கிறது ஆராய்ச்சி. மேலும் பூண்டு பல்லை எடுத்து அதையும் மருக்களின் மேல் வைத்து வர உதிர்ந்து விடும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க விளக்கெண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் தலையில் இருக்கும் பொடுகு, செபரோகிக் டெர்மார்ட்டிஷ், பிளவுபட்ட கூந்தல் இவற்றை சரி செய்கிறது. இதை ஜோபோபா மற்றும் கடுகு எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து முடிக்கு தேய்த்தால் இளநரை கருப்பாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எந்த வித அறிவியல் சான்றும் இல்லை.

​ஊட்டச்சத்து அளவுகள்
ரிச்சினிலிக் அமிலம் அதிகளவில் உள்ளது. 90 % ஆயிலில் லினிலிக் அமிலம் (4%) ஒல்லிக் அமிலம் ( 3%) ஸ்டீரியிக் அமிலம் (1%) பிற லினிளெமிக் கொழுப்பு அமிலங்கள் (> 1%) உள்ளன. விளக்கெண்ணெய் பேக் செய்வது எப்படி தேவையான பொருட்கள் ஹெக்ஸான் இல்லாத விளக்கெண்ணெய் 1 மூடி இல்லாத பெரிய கண்ணாடி ஜார்ப்ளீச் பண்ணாத கம்பளி துணி

பயன்படுத்தும் முறை
இப்பொழுது கம்பளி துணியை 3 மடக்குளாக வைத்துக் கொள்ளுங்கள். அதை கண்ணாடி ஜாருக்குள் திணிக்க வேண்டும். இப்பொழுது அதில் விளக்கெண்ணெய் ஊற்றி அந்த துணி முழுவதும் விளக்கெண்ணெய்யில் நனையும் படி செய்யவும். ஜாரை நன்றாக குலுக்கி கொள்ளுங்கள் உங்களுக்கு தேவைப்படும் நேரம் இந்த துணியை எடுத்து பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த பேக்கை பயன்படுத்துவதற்கு முன் தரையில் ஒரு துணியை விரித்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இப்பொழுது பாதிகப்பட்ட இடத்தில் அந்த பேக்கை எடுத்து வையுங்கள். 20 – 30 நிமிடங்கள் நன்றாக உரியும் வரை செய்யுங்கள்.

கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பைப் போக்க விளக்கெண்ணெயைச் சூடாக்கி, அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து தடவலாம்; சிலநாள்களில் சரியாகிவிடும். மூக்கடைப்பு, சளித்தொல்லை, தலைவலியால் அவதிப்படுபவர்கள் விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து, தீயில் எரித்து அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் பிரச்னை சரியாகும்.

ஆமணக்கு எண்ணெய் கொண்டு பல வழிகளில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்; இங்கு ஒரு சில வழிமுறைகளை பற்றி பார்க்கலாம். 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் ஆகியவற்றை கலந்து சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும். இது வெண்மையான மற்றும் ஒளிரும் சருமம் பெற உதவும்.

மேலும் 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை கலந்து, சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும். பொலிவான, அழகான, வெண்மையான சருமம் பெற இந்த முறை உதவும்.

முகத்தை நன்றாக கழுவிய பின், மிதமான சூடு கொண்ட வெந்நீரில் ஒரு சில துளிகள் விளக்கெண்ணெயை சேர்த்து, ஒரு சுத்தமான துணி கொண்டு இந்த எண்ணெய் மற்றும் நீர் கலந்த கலவையில் ஒற்றி எடுத்து, முகத்தில் வட்ட வடிவ இயக்கத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும்.
இதை இரவில் தூங்க செல்லும் முன் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் முகத்தை கழுவவும். எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் இந்த விளக்கெண்ணெயை குறைவாக பயன்படுத்த வேண்டும்்.

உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் விரிசல்களை போக்க, மற்ற எந்த ஒரு செயற்கை அழகு சாதன பொருட்களை காட்டிலும், அதிக நன்மையை அளிக்கக்கூடியது ஆமணக்கு எண்ணெய் ஆகும்

ஆமணக்கு எண்ணெயை உதடுகளில் தேய்த்து, சற்று நேரம் நன்கு ஊற விடவும்; சிறிது நேரத்திற்கு பின், உதடுகளில் லிப் பால்ம் போன்றவற்றை தடவி கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், வெடிப்புகளற்ற, விரிசல்களற்ற, அழகான உதடுகளை பெற முடியும்.

கருவளையங்கள்
கண்களுக்கு அதிக வேலை அளிப்பதனால், சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உறக்கம் ஆகிய அடிப்படை தேவைகள் உடலுக்கு கிடைக்காததனால், கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. இதனால் முக அழகு குன்றி காணப்படும்; இதை போக்க ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம்.

இரவு தூங்க செல்லும் முன், ஆமணக்கு எண்ணெயை கையில் எடுத்துக்கொண்டு, கண்களுக்கு கீழாக கருவளையங்கள் உள்ள இடத்தில் அரை நிமிடம், வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும். காலையில் எழுந்து முகத்தை கழுவி விடவும்; இவ்வாறு தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் விரைவில் மறைந்துவிடும்.

நிறமூட்டல்
அதிகப்படியான மெலனின் உற்பத்தியால், சருமத்தின் நிறம் குன்றி கருமையாகலாம்; கடினமான சுற்றுச்சூழல் நிலைகள், சரியற்ற உணவு முறை போன்றவற்றால் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்கலாம். இதனால் நிறம் கருமையாகலாம்; நிறமூட்டல் பிரச்சனை ஏற்படலாம். இதனை சரி செய்ய வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட இந்த ஆமணக்கு எண்ணெய் அதிகம் உதவும்.

காலை எழுந்தவுடன் அல்லது தூங்க செல்லும் முன், சருமத்தை நன்கு கழுவி, ஒரு துணியால் ஈரத்தை துடைத்து விடவும்; பின் ஆமணக்கு எண்ணெயை கையில் எடுத்துக் கொண்டு சருமத்தில் தடவி, வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை கழுவி, துணியால் துடைத்து கொள்ளவும்; இம்முறையை தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். ஆனால், எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் இந்த விளக்கெண்ணெயை அதிகம் பயன்படுத்த வேண்டாம்

உச்சந்தலையில் ஆமணக்கு எண்ணெயை தடவி விட்டு, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்கள் ஊற வைத்து, பின் ஷாம்பூ போட்டு தலை முடியை கழுவவும்.
இவ்வாறு செய்து வருவது தலை முடியின் வளர்ச்சியை தூண்ட உதவலாம். தலையில் பொடுகு ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன.

ஜோஜோபா எண்ணெய், கடுகு விதை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை கலந்த கலவை, நரை முடி பிரச்சனையை போக்கி, மீண்டும் கருமையான கூந்தலை பெற உதவுவதாக கூறுகின்றன.

ஆமணக்கு எண்ணெய், உச்சந்தலை வறண்டு போகுதல், உச்சந்தலையில் ஏற்படகூடிய திட்டுக்கள் முதலிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது

சருமத்தில் மற்றும் உச்சந்தலையில், பூஞ்சை அல்லது கேண்டிடா தொற்றுகளால் உருவாகும் படை அல்லது படர்தாமரை போன்றவற்றை சரிப்படுத்த, தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை கலந்து, தொற்று உள்ள இடங்களில் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்

castrol 1
castrol 1

விளக்கெண்ணெய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை தூண்டி விடவும், நிணநீர் வடிகால் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.

ஆமணக்கு எண்ணெயை 2 முதல் 3 தேக்கரண்டி உணவாக அல்லது உணவுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடல் எடை ஒரு சில பவுண்டுகள் வரை குறைந்து வருவதை உங்களால் அறிந்து கொள்ள முடியும். உணவுடன் சேர்த்து உண்ண விருப்பமில்லாத நபர்கள் உணவுக்கு முன் அல்லது பின் 2 முதல் 3 தேக்கரண்டி விளக்கெண்ணெயை பழச்சாறு போன்ற பானங்களில் சேர்த்து பருகலாம்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், இரண்டு வாரங்களில் 10 பவுண்டுகள் வரை எடை குறைய வாய்ப்புண்டு என்று கூறப்படுகிறது. உடல் எடையை குறைக்க ஆமணக்கு எண்ணெய் கொண்டு ஒத்தடம் போன்ற பேக் செய்தும் பயன்படுத்தலாம்; மேலும் ஆமணக்கு எண்ணெயை இஞ்சி, கிரீன் டீ போன்றவற்றுடன் கலந்து உடல் எடை குறைப்பு பானம் செய்தும் பருகலாம். இந்த முறைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்க உதவும்.

சிறுநீரக கற்கள் பிரச்சனை கொண்ட ஒரு நபரை படுக்க வைத்து, அவரின் வயிற்றின் மேல் பகுதியில் இருந்து, தொடை வரை, ஆமணக்கு எண்ணெயில் நன்கு ஊறவைக்கப்பட்ட ஒரு மிருதுவான துணியை விரித்து வைக்கவும்.

இதன் மேல் இன்ஃப்ரா ரெட் என்று சொல்லக்கூடிய அகச்சிவப்பு விளக்கின் ஒளியை படுமாறு வைத்துவிட்டு, சில மணி நேரங்கள் கழிந்த பின் சோதித்து பார்த்தால், சிறுநீரக கற்கள் பெருமளவு உடைந்து, கரைந்து, மறைந்து போயிருப்பதை அறியலாம். இது தவிர சிறுநீரக கற்களை குணப்படுத்த ஆமணக்கு எண்ணெயை வேறு பல வழிகளிலும் கூட பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இருமல் மற்றும் சளி பிரச்சனைகளை போக்க விளக்கெண்ணெய் ஒரு நல்ல வீட்டு வைத்தியம் ஆகும்; இயற்கையான விளக்கெண்ணெய், 2-3 பல் பூண்டு, 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி, அரை தேக்கரண்டி சிவந்த மிளகாய் பொடி, 3 முதல் 4 தேக்கரண்டி யூக்கலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, கலந்து செய்த கலவையை மார்பு பகுதியில் தடவி வருவது உதவும்.

அடர்ந்த ஆமணக்கு எண்ணெயை ஒரு சிறிய நாணயம் அளவிற்கு எடுத்துக் கொண்டு, அதனை முதுகில் வலி உள்ள இடத்தில் தடவி, மெதுவாக, நன்கு மசாஜ் செய்யவும். இந்த மசாஜ் முறையை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்து வந்தால், முதுகு வலி முற்றிலும் மறைந்து விடும்

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,078FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,965FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும்...

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக...

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Latest News : Read Now...