spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஆண்மையை அதிகரிக்கும் ஆலம் பழம்!

ஆண்மையை அதிகரிக்கும் ஆலம் பழம்!

- Advertisement -

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து அருந்தலாம்.

ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

ஆலம் பழம் தசை வலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது. பல்வலி ஏற்படும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டொருந்தால் பல்வலி போக்கும்.

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும்.

ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும்.

கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

ஆலமரத்தின் பழங்களை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும்.

ஞாபக மறதி நீங்கும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால்பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.

ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலர வைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும். ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும்.

பொடியாக இருந்தால் அரை டீஸ்பூன் அளவு எடுக்கலாம்.விழுதாக இருந்தால் கொட்டைப்பாக்கு அளவு எடுக்கலாம். தினமும் இரவு நேரத்தில் ஒரு டம்ளர் பசும்பாலில் இதை கலந்து குடிக்க வேண்டும். தம்பதியர் இருவருமே குடிக்கலாம்.

ஆண்களுக்கு விந்தணுக்கள் வீரியம் குறைவாக இருந்தால் அதை திடப்படுத்த உதவும். ஆண்மைக்கேற்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.
விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவதை குணப்படுத்தும். பாலியல் குறைபாடுகளை நீக்கும். பாலியலில் ஆர்வத்தை தூண்டும்.
பெண்களுக்கு கர்ப்பப்பையில் உண்டாகும் சிறு குறைபாடுகளை நீக்கும். சிலருக்கு கர்ப்பப்பை வீக்கம் இருக்கும் இந்த வீக்கத்தை கட்டுப்படுத்தவும் இது உதவும். மாதவிடாய் கோளாறை குணபப்டுத்தி சீரான மாதவிடாயை உண்டாக்கும். வெள்ளைப்படுதலை குணமாக்கும்.

இந்த மருந்தை எடுத்துகொள்ளும் நாட்களின் போது தம்பதியர் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு மண்டலம் வரை சாப்பிட்ட பிறகு நிச்சயம் பலன் தெரியும்.

பெண் உறுப்பில் நுண்ணியிரிகளால் தொற்றூ உண்டாக்கும் போது ஆலமரத்தின் இலைகள் அல்லது பொடியை இடித்து நீரில் சேர்த்து அந்த நீரை கொண்டு பெண் உறுப்பை கழுவினால் தொற்றுகள் நீங்கும்.

வளரும் குழந்தைகளுக்கு அவ்வபோது பாலில் சிட்டிகை பொடி கலந்து கொடுத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். ஆலம் மரத்தின் பழங்களில் இருக்கும் செரடோனின் என்னும் பொருள் மன அழுத்தத்தையும் மன சோர்வையும் குணப்படுத்தும்.

துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்கு தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.
ஆலம் விழுது துளிரையும் விதையும் அரைத்து 5 கிராம் அளவுக்கு காலையில் மட்டும் பாலில் கலந்து கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.

ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் சிதைத்து 4 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வர மது மேகம் தீரும். 4 நாட்களுக்கு ஒரு முறை தயாரித்து கொள்ளலாம். 1 முதல் 4 மண்டலம் வரை சாப்பிடலாம்.

ஆலம் பட்டை, அத்திப்பட்டை, அவுரிவேர்பட்டை வகைக்கு 40 கிராம் அளவு எடுத்து அதனுடன் 10 கிராம் மிளகு சேர்த்து 8 லிட்டர் நீரில் போட்டு 2 லிட்டராக காய்ச்சி வேளைக்கு 250 மி.லி வீதம் தினம் 3 வேளை குடித்து வர ரச பாஷாணங்களின் வேகம் குறையும்.

ஆலம் பாலை காலை, மாலை தடவி வர வாய் புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்.

ஆலம் வேர்ப்பட்டை, மரப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் சிதைத்து போட்டு அரை லிட்டராக காய்ச்சி காலை, மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கம் தீரும்.

விழுதுகள் தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில் மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.

ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.

சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.இம்மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் . இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டை குணம்பெறும்.

ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.

ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் ஆற விடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe