அடடே.. இவ்வளோ பயனா இதுல.. டிராகன் பழம்!

dragon - 2026

டிராகன் பழம், பழ அங்காடிகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம்.

அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்திலான இனிப்புக் கூழ், சிறு கருப்பு விதைகளுடன் இருக்கும்.சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்ட டிராகன் பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. டிராகன் பழம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.

வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது. டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது, பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

டிராகன் பழம் பல வித வளங்களை உடலுக்கு கொடுப்பதால் இதனை “சூப்பர் புட் “(Superfood ) என்று அழைக்கலாம்.
டிராகன் பழத்தில் 3 வகைகள் உள்ளன.

சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம்.
சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். :

இனம் , அளவு மற்றும் உருவத்தை கொண்டு இதன் சுவைகளில் வேறுபாடு இருக்கும். பொதுவாக இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில் இருக்கும். இதனை வெட்டி உட்புறத்தை பார்க்கும்போது கிவி பழத்தை போல் இருக்கும். சதையில் கறுப்பு புள்ளிகளாக விதைகள் இருக்கும்.

இந்த விதைகள் செரிமானத்திற்கு நல்லது. ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிப்பதில் இந்த பழத்தை பயன்படுத்துவர். இதன் இலைகளை கொண்டு ஆரோக்கியமான டீயை தயாரிக்கலாம். இதன் தோலில் ஊட்டச்சத்துகள் குறைந்து காணப்படுகிறது. பொதுவாக இதனை யாரும் பயன்படுத்துவது இல்லை.

ஆக்சிஜெனேற்றத்தை தடுப்பது, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை போன்றவை இதன் ஆரோக்கிய பலன்களாகும்.

நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு சிறந்த ஆற்றலை கொடுப்பது இதன் முக்கியமான பலனாகும். வைட்டமின் சி யின் அளவு மிகவும் அதிகமாக இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படும்.

உடலின் மிக பெரிய சொத்து இந்த வைட்டமின் சி. செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ ராடிக்கல் எனும் அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது.

இதனால் இதய நோய், புற்று நோய் போன்றவை தடுக்க படுகின்றன. வைட்டமின் சியை தவிர வைட்டமின் பி யின் குழுவும் அதிகமாக காணப்படுகிறது. பி 1, பி 2,பி 3 ஆகியவை, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன,சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன , கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன.

நார்ச்சத்து மிகவும் அதிகமாக டிராகன் பழத்தில் இருக்கின்றன. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமான பகுதி சிறந்த செயலாற்றலுடன் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.

ஆக்சிஜெனேற்றத்தை தடுக்கும் தன்மையை வைட்டமின் சியுடன் சேர்த்து மற்ற ஆதரங்களிலும் மூலமாகவும் இயற்கையாக கொண்டுள்ளது இந்த டிராகன் பழம். இந்த பழத்தில் காணப்படும் கரோட்டின், புற்று நோய்க்கு எதிரான குணங்களை வெளிப்படுத்துகிறது.

கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது. நீங்கள் சோர்வாக இருக்கும் போது, அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போது, பருவ நிலை மாற்றத்தால் உடலில்மாற்றங்கள் ஏற்படும்போதும் , புற்று நோய்க்கான அறிகுறிகள் தோன்றும்போதும் இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

ஒரு 100 கிராம் டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கலோரிகள் – 60
புரதம் – 2 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் – 9கிராம்
கொழுப்பு – 2 கிராம்
நார்ச்சத்துக்கள் – 1.5 கிராம்

டிராகன் பழம் கர்ப்ப காலத்தில் இரத்த சோகையைத் தடுக்கிறது. கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படுவதால் முன்கூட்டிய பிரசவம், குழந்தை இறப்பு, குறைந்த பிறப்பு எடை மற்றும் கருச்சிதைவுகள் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன. பெலிடங் நர்சிங் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் ஏழாம் நாள் ஆய்வில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணில் டிராகன் பழம் எரித்ரோசைட் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்ததால். கூறுகிறது. இது கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து அளவை அதிகரிக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் இரத்த சோகைக்கு மாற்று சிகிச்சை மருந்தாக டிராகன் பழச்சாறு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் டிராகன் பழங்களை எடுப்பதற்கு முன்பு உங்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

dragon tree - 2026

கீல்வாதம் போன்ற நாள்பட்ட அழற்சி நோயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த டிராகன் பழத்தை சாப்பிட்டு வரலாம். ஏனெனில் டிராகன் பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலியிலிருந்து விடுவிக்கும். நாள்பட்ட வலிகளுக்கு இது இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது

டைப் -2 நீரிழிவு நோயாளிகளுக்கு டிராகன் பழத்தை உணவில் சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை இயல்பாக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் நம் கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். இதற்கு டிராகன் பழம் கை கொடுக்கும்.

டிராகன் பழத்தை சாப்பிடுவது முகப்பருவைக் குறைக்கவும், வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிக்கவும்,சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கவும் உதவி செய்கிறது. வயதான புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் சுவாசிக்கவும் பளபளப்பாகவும் இருக்கவும் முடியும். டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சேதமடைந்த தோல் செல்களை சரிசெய்ய உதவும், இதனால் அதிக இளமை தோற்றம் ஏற்படக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் .

காய்ச்சல் மற்றும் பொதுவான சளி ஆகியவற்றை தடுக்கிறது. பாக்டீரியா மற்றும் கிருமிகள் போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிராக உங்கள் உடலைப் பாதுகாக்கும் திறனை மேம்படுத்துகிறது.

டிராகன் பழத்தை சாப்பிடுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்கலாம்.பழத்தின் விதைகள் உடலுக்கு தேவையான ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களை அளிக்கின்றன. அவை இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான அமிலங்கள். இது தமனிகளை கொழுப்பு படிவிலிருந்து காத்து சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இரத்தம் இதயத்திற்கு மற்றும் வெளியே உறுப்புகளுக்கும் சரியாக ஓட அனுமதிக்கிறது.

டெங்கு போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் குணமடைய அதிக காலம் ஆகும்; நோய் தீவிரமாக இருந்து சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் இறப்பு கூட ஏற்படலாம். ஒரு சாதாரண நபரின் உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மைக்ரோ லிட்டர் அளவுக்கும் 150,000 – 450,000 என்ற அளவில் இருக்கும்; ஆனால் டெங்கு நோயாளிகளில் வெறும் 10,000 பிளேட்லெட்டுகள் மட்டுமே இருக்கும்.

இரத்த குழாய்களில் இரத்தம் கசிந்து, இரத்த உறைதல் ஏற்படுவதை தடுப்பது தான் பிளேட்லெட்டுகளின் முக்கிய பணி ஆகும்; இந்த குறைபாடு சரிசெய்யப்படவில்லை எனில் அது இரத்தக்கசிவு நோய் ஏற்பட காரணமாகலாம். டிராகன் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் மற்றும் இப்பழத்திலுள்ள பலம் வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டு டெங்கு போன்ற தொற்று நோய்களை சரிசெய்யவும் முடியும்.

பிறவி கண் அழுத்த நோய் ஏற்படாமல் தடுக்க டிராகன் பழம் உதவுகிறது என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இப்பழத்தில் மனிதர்களின் கல்லீரலில் மட்டுமே காணப்படும் ஒரு புரதமான, P450 சைட்டோகுரோமை தடுக்கும் சக்தி நிறைந்துள்ளது மற்றும் இது நுரையீரல், சிறுநீரகத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இப்புரதம் பிறவி கண் அழுத்த நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைத்து, அந்நோயை தடுக்கிறது

பசி உணர்வே ஏற்படாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ ஒரு அற்புத பழம் உள்ளது, அது தான் டிராகன் பழம் ஆகும்.

டிராகன் பழம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்கி, பசி உணர்வை ஏற்படுத்த உதவுகிறது.

மங்கலான பார்வை மற்றும் கண்களின் பின்புறத்தில் வலியை அனுபவிக்கும் நபர்கள், கண்டிப்பாக டிராகன் பழத்தை தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பழம் கண்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்; இதை நிகழ்த்த டிராகன் பழத்திலுள்ள பீட்டா கரோட்டின், பிற அத்தியாவசிய தாவர நிறமிகள் போன்ற சத்துக்கள் உதவுகின்றன. டிராகன் பழத்திலுள்ள சத்துக்கள் கண்களை தீங்கு விளைவிக்கும் இறந்த – தேவையற்ற செல்களிடம் இருந்து காத்து, கேடராக்ட், மாகுலர் சிதைவு போன்ற கண் தொடர்பான நோய்கள் எதுவும் ஏற்படாமல் காக்க உதவுகின்றன.

டிராகன் பழம், நம் உடலில் RBC அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது; இதிலுள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் மூளையில் சேதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். இந்த ஊட்டச்சத்துக்கள் நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி, மூளையின் இயக்கத்தை அதிகரிக்க உதவும்

தேவையான பொருட்கள்

½ டிராகன் பழம்

1 மேஜைக்கரண்டி யோகர்ட்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

டிராகன் பழத்தை அறுத்து அதன் சதையை எடுத்து, மிருதுவான பேஸ்ட் தயாரித்து கொள்ள வேண்டும்.
இப்பேஸ்ட்டில் யோகர்ட்டை கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
மிதமான சூடு கொண்ட நீர் கொண்டு முகத்தை கழுவி மிருதுவான துண்டு கொண்டு முகத்தை துடைக்கவும்.
இம்முறையை இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒருமுறை என செய்து வந்தால், முதுமையான தோற்றம் முற்றிலும் மறைந்து, இளமையான சருமம் கிடைக்கும்.

சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட எரிச்சலை இதமாக்கவும் உதவும் (10).

தேவையான பொருட்கள்

¼ டிராகன் பழம்

1 வைட்டமின் ஈ மாத்திரை

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

டிராகன் பழத்தை அறுத்து அதன் சதையை எடுத்து கூழாக்கி கொள்ளவும்.
டிராகன் பழ கூழில் வைட்டமின் ஈ மாத்திரையை உடைத்து சேர்த்து கொள்ளவும்.
சூரிய வெப்பம் தாக்கிய சரும பகுதியில் இக்கலவையை தடவி, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி, சருமத்தை காய வைக்கவும்.
இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
முகப்பருவை போக்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

¼ டிராகன் பழம்

3 – 4 காட்டன் பஞ்சுகள்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

டிராகன் பழச்சதையை வெளியே எடுத்து, அதை மிருதுவான பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.
காட்டன் பஞ்சை அப்பேஸ்ட்டில் நனைத்து, முகப்பரு உள்ள இடங்களில் தடவவும்; காட்டன் பஞ்சை பயன்படுத்துவதன் மூலம் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் சருமத்தின் பிற பகுதிகளுக்கு பரவுவது தடுக்கப்படுகிறது.
தடவிய கலவையை 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் கழுவி விடவும்.
இச்செய்முறையை வாரம் இருமுறை செய்தால் பருக்கள் இல்லாத சருமத்தை பெறலாம்.

டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் மீது நன்கு வேலை செய்து, முடியை – கூந்தலின் தன்மையை சரிப்படுத்தி கூந்தலை ஆரோக்கியமானதாக மாற்ற உதவுகிறது (14).

தேவையான பொருட்கள்

1 டிராகன் பழம்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

டிராகன் பழத்தின் சதையை வெட்டி எடுத்து, அதை மிருதுவான பசை போன்று அரைத்து கொள்ளுங்கள்.
இப்பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவவும்.
தலைமுடியை 15-20 நிமிடங்களுக்கு நன்கு ஊற வைத்து, பின்னர் இலேசான ஷாம்பு கொண்டு அலசவும்.
வாரம் ஒருமுறை இந்த முறையை செய்து வந்தால், நல்ல பலன்களை பெற முடியும்.

டிராகன் பழம் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், கூந்தலின் சோர்வான தோற்றத்தை போக்கி பொலிவை ஏற்படுத்த உதவும்; இத்தகைய மிளிரும் கூந்தலை பெற கொஞ்சம் புளிப்பான, வித்தியாச சுவை கொண்ட டிராகன் பழச்சாறை குடிக்க வேண்டும். டிராகன் பழச்சாறை குடிக்க விருப்பமில்லை எனில், டிராகன் பழத்தை ஹேர் மாஸ்க் போன்று தயாரித்து நேரடியாக உச்சந்தலையில் தேய்த்து கொள்ளலாம். இவ்வாறு டிராகன் பழத்தை ஹேர் மாஸ்க்காக உச்சந்தலைக்கு தடவிய பின் 20 நிமிடங்கள் ஊற வைத்து, சாதாரண நீர் கொண்டு முதலில் கழுவவும்; அதன் பின் இலேசாக ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இம்முறையை தினம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; இதனை சில மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடியின் தன்மையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். டிராகன் பழச்சாறை பருகி வந்தால் கூட இதே பலன்களை பெற முடியும்.

டிராகன் பழங்கள், குறிப்பாக சிவப்பு டிராகன் பழங்களில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்டுகள், என்சைம்கள் இருப்பதால், அவை தலைமுடியை மிருதுவாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்ற உதவும்

எந்தவொரு பழத்தையும் சாப்பிட்ட உடன் உண்ணக்கூடாது; டிராகன் பழம், கொய்யா பழம் போன்ற அதிக நார்ச்சத்து கொண்ட பழங்களை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. டிராகன் பழத்தை இரண்டாக அறுத்து, உள்ளே இருக்கும் வெள்ளை அல்லது சிவப்பு சதையை உட்கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories