December 11, 2025, 6:38 PM
26.2 C
Chennai

அடர்ந்த அழகான புருவங்களைப் பெற..!

eyebrow
eyebrow

புருவங்கள் தான் ஒருவரின் முகத்தை அழகாக வெளிக்காட்டுகிறது. சிலருக்கு புருவங்களில் உள்ள முடிகள் அடர்த்தியின்றி இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் புருவங்களை பென்சில், மை ஆகியவற்றை கொண்டு வரைந்து அழகாக்கி கொள்வார்கள். மேலும் சிலர் அழகாக தெரிவதற்காக நிறைய பணம் செலவழித்து நவீன சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஆனால் இப்படி பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வந்தால், நிச்சயம் நல்ல அடர்த்தியான புருவத்தை பெறலாம்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யானது முடியின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. எனவே இந்த எண்ணெயை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து 1 மாதம் பின்பற்றி வந்தால், உங்கள் புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். உடலும் குளிர்ச்சி அடையும்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ அதிகம் உள்ளது. இது முடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டி விடும். தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.

கற்றாழை
கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் கண்கூடாக காணலாம்.

முட்டையின் மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 15- 20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு காலத்திற்கு செய்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதைப் காண முடியும்.

வெந்தயம்
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் போல அரைத்து, புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை காணலாம்.

ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால், உங்கள் புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை புருவங்களுக்கு தினமும் தடவி வாருங்கள்.

வெங்காயத்தை தோள் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.

தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
விட்டமின் ஈ ஆயில் – அரை டீஸ்பூன்
விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன்
மஸ்காரா பிரஷ் – 1

பயன்படுத்தும் முறை
மேலே சொன்ன எண்ணெய்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலின் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மஸ்காரா பிரஷில் அந்த எண்ணெயை குழைத்து, பிரஷ்ஷினால், புருவத்தில் பூசுங்கள். தினமும் இரவில் பூசி வாருங்கள். இந்த எண்ணெயை இமைகளுக்கும் பூசலாம். நீங்கள் பிரஷினால் தீட்டும் அதே வாகில் முடி வளர்ந்து, புருவத்தை அடர்த்தியாய் காண்பிக்கும். ஒரு மாதத்தில் அழகான புருவம் கொண்ட பெண்ணாக நீங்கள் இருப்பது உறுதி.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய்,ஆலிவ் ஆயில் மூன்றையும் கலந்து – கால் டீஸ்பூன்
சாம்பார் வெங்காயத்தை பிழிந்து சாறாக்குங்கள்- 4 சொட்டு,
கற்றாழைச்சாறு- 3 சொட்டு
இஞ்சி சாறு – 2 சொட்டு
பால் அல்லது பாலேடு – 2 சொட்டு

இதை அனைத்தையும் கலந்து இரவு படுப்பதற்கு முன்பு இதை புருவத்தில் தடவுங்கள். புருவங்க ளைச் சுற்றி கண்களுக்குள் போகாமல் பார்த்துகொள்ளுங்கள். ஒரு நிமிடம் மசாஜ் செய்வது பொலி வாக வைக்க உதவும்.

தொடர்ந்து தினமும் இரவு இதை பயன்படுத்துங்கள். தொடர்ந்து பயன்படுத்தினால் தான் புருவத் தில் வளர்ச்சியும், அடர்த்தியும், முடி உதிர்தலும் தடுக்க முடியும்.

எலுமிச்சை சாற்றினை உபயோகப்படுத்தியதும், அதன் தோலினை வீசி எறியாதீர்கள். அது புருவ வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் சத்துக்களைக் கொண்டுள்ளது. எலுமிச்சைத் தோலினை தினமும் உங்கள் புருவத்தில் தடவி வாருங்கள். அருமையான பலன் தரும்.

புருவ சீரம் கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன் முகத்தை கழுவிய பின், சீரத்தை ஒரு பிரஷினால் புருவத்தில் தடவ வேண்டும்.

மறு நாள் காலையில் கழுவுங்கள். இப்படி செய்வதால் புருவ முடிகள் தூண்டப்பட்டு, முடி வளர ஆரம்பிக்கும்

தேவையான பொருட்கள்

ரோஸ்மேரி
ஆமணக்கு எண்ணெய் (Castor Oil)
ஒரு கப் தண்ணீர்
எப்படி தயாரிப்பது…?

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீரை எடுத்து சூடுபடுத்தவும். அதில் சிறிது ரோஸ்மேரி இலைகளை சேர்க்கவும். அவை உலர்ந்த ரோஸ்மேரி இலைகளாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஒரு கப் தண்ணீர் பாதியாக குறையும் வரை தண்ணீரைக் கொதிக்க விடவும். பின்னர் ஆறியவுடன் அதனை வடிகட்டி, அதில் ஆமணக்கு எண்ணெயைக் கலக்கவும். இதனை ஒரு ஜாடியில் சேமித்து வைத்துக் கொண்டு கூட நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கலவையை கண்ணின் இமை மற்றும் புருவங்களில் பருத்தித் துணியினைக் கொண்டு மெதுவாகத் தடவினால் போதுமானது.

ரோஸ்மேரி மிகச் சிறந்த ஒரு மூலிகைப் பொருள் ஆகும். ரோஸ்மேரியில் இருந்து கிடைக்கும் எண்ணெய் மிக முக்கியமான அத்தியாவசிய எண்ணெய் ஆகும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். அதனால் தான் உங்கள் தலை முடியின் தடிமனை மேம்படுத்த ரோஸ்மேரி மிகச் சிறந்த தேர்வாகும். தலை முடிக்கு மட்டுமின்றி ரோஸ்மேரி, கண் இமை மற்றும் புருவ முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

மிளகுக் கீரை இலைகள்
4 அல்லது 5 சொட்டு ஆலிவ் ஆயில்
ஒரு கப் தண்ணீர்
எப்படி தயாரிப்பது…?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனுடன் மிளகுக் கீரை இலைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் அதனுடன் சில துளிகள் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து குறைந்த அளவு தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் ஆறியவுடன் அதனை வடிகட்டிக் கொள்ளவும். மேலே ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்துவது போலவே இதனையும் பயன்படுத்தலாம்.

மிளகுக் கீரை கண் இமைகள் மற்றும் புருவங்களின் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடும். மேலும், மிளகுக் கீரை முடி உதிர்வதைத் தடுக்கும். மிளகுக் கீரையில் இரும்பு, போலேட், பொட்டாசியம் மற்றும் ஒமேகா ஆகியவை நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை சில கொத்து
வைட்டமின் ஈ எண்ணெய்
ஒரு கப் தண்ணீர்
எப்படி செய்யலாம்…?

ஒரு வாணலியில் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைக்கவும், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் கறிவேப்பிலையை போடவும். கறிவேப்பிலை சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை தண்ணீரை கொதிக்க வைத்து பின்னர் ஆற விடவும். ஆறிய பின் அந்த நீரை வடிகட்டி அதில் வைட்டமின் ஈ எண்ணெய் சில துளிகள் கலக்கவும். இந்த சீரத்தை உங்கள் கண் இமைகள் மற்றும் புருவங்களை சுற்றி தடவவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

Topics

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

Entertainment News

Popular Categories