சித்தர்கள் பயன்படுத்திய அஷ்ட கர்ம மூலிகைகள்!

Published:

ashtabhandhanam
ashtabhandhanam

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு

பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த சித்தர்கள் மூலிகைகளைk கொண்டே மந்திர உருவேற்றி பல செயல்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் (எட்டு சித்திகள்) எனப்படுகின்றன. ஒரு சித்திக்கு எட்டு மூலிகை என அஷ்ட சித்திக்கு அறுபத்தி நான்கு மூலிகைகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

அஷ்டகர்ம்ம் என்பது

  1. ஆகர்ஷனம்
  2. உச்சாடனம்
  3. தம்பனம்
  4. பேதனம்
  5. மாரணம்
  6. மோகனம்
  7. வசியம்
  8. வித்வேஷனம் ஆகும்.

ஆகர்ஷனம்
நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு;

  1. வேளை
  2. உள்ளொட்டி
  3. புறவொட்டி
  4. சிறு முன்னை
  5. குப்பைமேனி
  6. அழுகண்ணி
  7. சிறியாநங்கை
  8. எருக்கு

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

maruthani 2
maruthani 2

இந்த மூலிகைகளில் ;

  1. வேளை, குப்பைமேனி – மிருகங்களை அழைப்பதற்கு
  2. உள்ளொட்டி, அழுகண்ணி – பெண்களை அழப்பதற்கு
  3. சிறுமுன்னை – அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு
  4. புறவொட்டி – துர்தேவதைகளை அழைப்பதற்கு
  5. எருக்கு – தேவதைகளை அழைப்பதற்கு
  6. சிறியாநங்கை – அனைத்து அழைப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

உச்சாடனம்

பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு;

  1. பேய்மிரட்டி
  2. மான் செவிகள்ளி
  3. தேள்கொடுக்கி
  4. கொட்டைக்கரந்தை
    5.வெள்ளைக் கண்டங்கத்திரி
  5. மருதோன்றி
  6. பிரமதண்டு
  7. புல்லுருவி
    என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.
    இந்த மூலிகைகளில் ;
  8. பேய்மிரட்டி – மிருகங்களை விரட்ட
  9. மான்செவிகள்ளி – எதிரிகளை விரட்ட
  10. தேள்கொடுக்கி – உடலில் ஏறிய விஷங்களை விரட்ட
  11. கொட்டைக்கரந்தை – நீர்வாழ் உயிரனங்களை விரட்ட
  12. வெள்ளைக் கண்டங்கத்தரி – கால்நடைகளை விரட்ட
  13. மருதோன்றி, புல்லுருவி – பூத பைசாசங்களை விரட்ட
  14. பிரமதண்டு – பிறர் நமக்கு செய்யும் தீமைகளை விரட்ட பயன்படுத்தப் படுகின்றன.
ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

பேதனம்

ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு;

1.வட்டதுத்தி

  1. செம்பசளை
  2. மாவிலங்கு
  3. பாதிரி
  4. கோழியாவரை
  5. சீந்தில்கொடி
  6. புடலங்கொடி
  7. ஆகாயதாமரை
    என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.
  8. வட்டதுத்தி – நெருப்பின் உக்கிரத்தைப் பேதிக்க
  9. செம்பசளை – மனிதனின் எண்ணத்தைப் பேதிக்க
  10. மாவிலங்கு, பாதிரி – பூத, பிசாசுகளைப் பேதிக்க
  11. கோழியாவரை – துர்தேவதைகளைப் பேதிக்க
  12. சீந்தில்கொடி – எதிரிகளைப் பேதிக்க
  13. புடலங்கொடி – பெண்களைப் பேதிக்க
  14. ஆகாயதாமரை – வியாதிகளைப் பேதிக்க பயன்படுத்தப்படுகின்றன.

மாரணம்

கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களைஅதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கிக் கொல்வது. இதற்கு;

  1. நச்சுப்புல்
  2. நிர்விஷம்
  3. சித்திரமூலம்
  4. அம்மன் பச்சரிசி
  5. கார்த்திகைக் கிழங்கு
  6. மருதோன்றி
  7. கருஞ்சூரி
  8. நாவி
    என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.
  9. நச்சுப்புல், நிர்விஷம் – மனிதர்களை மாரணம் செய்ய
  10. சித்திரமூலம், கருஞ்சூரை – வியாதிகளை மாரணம் செய்ய
  11. அம்மன் பச்சரிசி, நாசி – கண்ணாடிகளை மாற்ற
  12. மருதோன்றி, கார்திகைகிழங்கு – மிருகங்களை மாரணம் செய்ய
    பயன்படுத்தப்படுகின்றன.
ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

மோகனம்

பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு;

  1. பொன்னூமத்தை
  2. கஞ்சா வேர்
  3. வெண்ணூமத்தை
  4. கோரைக்கிழங்கு
  5. மருளூமத்தை
  6. ஆலமரவிழுது
  7. நன்னாரி
  8. கிராம்பு
    என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.
  9. பொன்னூமத்தை – பெண்களை மோகிக்க
  10. கஞ்சா வேர் – பொதுமக்களை மோகிக்க
  11. வெண்ணூமத்தை – உலகத்தை மோகிக்க
  12. கோரைக்கிழங்கு – விலங்குகளை மோகிக்க
  13. மருளூமத்தை – தேவதைகளை மோகிக்க
  14. ஆலம்விழுது – அரசர்களை மோகிக்க
  15. கிராம்பு – மனிதர்களை மோகிக்க
  16. நன்னாரி – எல்லாவற்றையும் மோகிக்க
    பயன்படுத்தப்படுகின்றன.

வசியம்

எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு;

  1. சீதேவிச் செங்கழுநீர்
  2. நிலவூமத்தை
  3. வெள்ளை விஷ்ணுகிரந்தி
  4. கருஞ்செம்பை
  5. வெள்ளைக் குன்றிமணி
  6. பொன்ணாங்கன்னி
  7. செந்நாயுருவி
  8. வெள்ளெருக்கு
    என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.
  9. சீதேவி செங்கழுநீர் – இராஜ வசியத்திற்கு
  10. நிலவூமத்தை – பெண் வசியத்திற்கு
  11. வெள்ளெருக்கு – லோக வசியத்திற்கு
  12. கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி – ஜன வசியத்திற்கு
  13. வெள்ளைக் குன்றிமணி – விலங்கு வசியத்திற்கு
  14. பொனனாங்கன்னி – தேவ வசியத்திற்கு
  15. செந்நாயுருவி – சாபம், வழக்குகள் வசியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

வித்துவேஷனம்

பகையை உண்டாக்குதல். இதற்கு;

  1. கருங்காக்கனம்
  2. வெள்ளைக் காக்கனம்
  3. திருகுக் கள்ளி
  4. ஆடுதின்னாபாளை
  5. பூனைக்காலி
  6. கீழாநெல்லி
  7. ஏறண்டம்
  8. சிற்றாமணக்கு

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

  1. கருங்காக்கணம் – அரசர்களுக்குள் பகை உண்டாக்க
  2. வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி – தேவர்களுக்கு
  3. ஆடுதின்னாபாளை – பூத, பைசாசங்களுக்கு
  4. பூனைக்காலி – பெண்களுக்கு நோய் உண்டாக்க
  5. கீழாநெல்லி – எதிரிகளால் உண்டாகும் ஆபத்தைத் தடுக்க
  6. சிற்றாமணக்கு – உணவை உண்ணாமல் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

தம்பனம்

தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயைக் கட்டுதல். இதற்கு;

  1. கட்டுக்கொடி
  2. பால்புரண்டி
  3. பரட்டை
  4. நீர்முள்ளி
  5. நத்தைச்சூரி
  6. சத்திசாரணை
  7. பூமிச்சர்கரை
  8. குதிரைவாலி
    என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.
  9. கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி – விந்துவைக் கட்ட
  10. கட்டுக்கொடி – தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர
  11. பால்புரண்டி – பெண்களின் முலைப்பாலைக் கட்ட
  12. பரட்டை – வயிற்றுப் போக்கை நிறுத்த
  13. நத்தைச்சூரி – கற்களைக் கறைக்க
  14. சத்திசாரணை – செயல்களைச் செயல்படாமல் கட்ட
  15. பூமிச்சர்கரைக் கிழங்கு – திரவத்தைக் கட்டித் திடமாக்க
  16. குதிரைவாலி – கருப்பையில் உள்ள கருவை கட்ட பயன்படுத்தப்படுகின்றன.

சித்தர்கள் மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்புக் கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லிப் பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்மம் எனும் எண்வகையான செயல்களைச் செய்திருக்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img