
ராகி ஆனியன் தோசை
தேவையான பொருட்கள்:
ராகி மாவு (கேழ்வரகு மாவு) – ஒரு கப்,
இட்லி மாவு – அரை கப்,
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – தேவையான அளவு,
புளித்த தயிர் – கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ராகி மாவுடன் புளித்த தயிர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்துக்கொள்ளவும். இதனுடன் இட்லி மாவையும் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு நன்கு கலக்கிக்கொள்ளவும். பின்னர் இந்த மாவைத் தோசையாக ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் இட்லி மிளகாய்ப் பொடி தூவியும் தோசை செய்யலாம்.