
தினை கீரை சாதம்
தேவையான பொருட்கள்:
தினை – 200 கிராம்,
நறுக்கிய சிறுகீரை – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
பூண்டு – 4 பல்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கவும்), மஞ்சள்தூள் – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தினையை பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் களைந்துகொள்ளவும். கீரையை அலசி வைக்கவும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் கீரை, மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு தினைக்கு இரண்டரை பங்கு என்கிற கணக்கில் தண்ணீரைச் சேர்க்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்ததும் தினையைச் சேர்த்து மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். கமகம தினை கீரை சாதம் தயார்.
குறிப்பு: பொன்னாங்கண்ணிக்கீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றிலும் இந்த சாதத்தைச் செய்யலாம். தினைக்குப் பதிலாக வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.