கனவின் விளைவு: இனிய மனைவி அமையும் அறிகுறி.!

Published:

dream-1
dream-1

குயில் இனிமையான குரலில் கூவுவது போல கனவு கண்டால் இனிய மனைவி அமைவாள்.

சூரியன் சந்திரன் கனவில் வந்தால் ஆரோக்கியம் கூடும்.

தெளிந்த நீரைக் கண்டால் நம் மனம் தெளிவாக இருக்கிறது என்று அர்த்தம். பொங்கிப் பெருகும் நீரைக் கண்டால் நாம் குழப்பத்தில் உள்ளோம் என்று அர்த்தம்.

பூச்சி அல்லது அட்டை கடிப்பது போல கனவு கண்டால் செல்வம் அல்லது குழந்தை சேரும்.

பயன்படுத்தாத அறை அல்லது இடத்தைக் கண்டால், வாழ்க்கையில் நீங்கள் புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். உங்களுக்கான தனிப்பட்ட திறமையை இப்போதுதான் தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தேர்வுகளில் தோல்வி, மேடைப் பேச்சுகளில் சொதப்புவது மாதிரியான கனவுகள் வந்தால், நாம் ஒரு விஷயத்தில் அதிகமாகக் குழம்பிப் போய் இருக்கிறோம் என்று பொருள்.

பறப்பதுபோல் ஒருவருக்குக் கனவு வந்தால், அவர் வாழ்க்கையில் மிகச் சுதந்திரமாக ஒரு முடிவை எடுத்திருக்கலாம், இல்லையென்றால், இனி வரும் காலத்தில் வாழ்க்கைக்குத் தேவையான சுதந்திரமான முடிவை எடுக்கப்போகிறார் என்று பொருள்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

கீழே விழுவது போல கனவு கண்டால் நாம் பிறரை சார்ந்து இருப்பதையும் உதவி கிடைப்பதில் சிரமம் இருப்பதையும் குறிக்கும்.

நாம் மேலே ஏறுவது போல கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்று கூறலாம்.

குலுங்க குலுங்க சிரித்து கொண்டு இருக்கும் குழந்தையை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் பணவரவு உயரும் என்பதை குறிக்கிறது.

Related articles

Recent articles

spot_img