நியூ தமிழ்நாடு அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 நிர்வாக அதிகாரி காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசுக்குச் சொந்தமாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் என மொத்தம் நான்கு முக்கியமான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன.
அதில் மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் காலியாக உள்ள பணிகளை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 300 பொது நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருப்பமுடையவர்கள் http://newindia.co.in/ என்ற தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் – நிர்வாக அதிகாரி (பொது) 300
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதாவது ஒரு பாடப்பிரிவில் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது, டிகிரி முடித்த சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டும், அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம் – ரூ 32ஆயிரம் முதல் ரூ 62 ஆயிரம் வரை
வயது வரம்பு: ஏப்ரல் 1ஆம் தேதியின் படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசின் விதிகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை – 3 வகையான தேர்வுகள் (முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு)
விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினருக்கு ரூ 750. எஸ்சி, எஸ்டி பிரிவினர் & மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 100.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி – செப்டம்பர் 21,2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.newindia.co.in/cms/336f90c8-319f-46a6-8269-c94f5a53c1d9/Detailed%20Advt.%20NIACL%20AO%20RECTT.%202021%2024.08.21.pdf?guest=truef
விண்ணப்பிக்க