அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! சொறி, சிரங்கு, தேமல், சேற்றுப்புண்..!

Published:

health tips 1
health tips 1

சுகப்பிரசவத்திற்கு…

பத்தாம் மாதத்தில் ஆடாதொடை வேரை இடித்துக் கஷாயம் வைத்து சாப்பிட சுகமான பிரசவம் உண்டாகும்.

சுளுக்கா?

பிரண்டையைத் தட்டிச் சாறெடுத்து, மஞ்சள்தூள், உப்பு அளவோடு சேர்த்து அடுப்பிலேற்றிக் காய்ச்ச கூழாகிப்பிசின் போலாகும் பக்குவத்தில் இறக்கி, பொறுக்கும் சூட்டுடன் சுளுக்கு கண்ட இடத்திவ் பற்றிட உடனே குணம் தெரியும்.

சுகமான பேதியாக…

கடுக்காயை இடித்து விதை போக்கி கஷாயம் வைத்து நன்றாக சுண்டியதும் அதை வடிகட்டி அதில் ஓர் அவுன்ஸ் விளக்கெண்ணெய் சேர்த்து எலுமிச்சம் பழரசத்தையும் அதில் கலந்து சாப்பிட சுகமான பேதியாகி பித்தம், வாயு, கபம் இவற்றின் வேதனையும் தணியும்.

சேற்றுப்புண் தீர….

மருதோன்றி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து இரவில் பற்றுப்போட்டு காலையில் கழுவி விடவும். இப்படி 3 நாள்கள் செய்து வந்தாலே போதும்.

சலவை நூல் துணியைச் சுட்டு சுரியாக்கி அதனை தேங்கா எண்ணெயில் கலக்கி புண்களில் தடவி அனல் காட்டினால் இரண் மூன்று நாள்களில் குணமடையும்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

சொறி, தேமல் பரவாமலிருக்க…

சரக்கொன்றைப்பூவை எலுமிச்சம் சாறுவிட்டு அரைத்து நாள்தோறு தேய்த்துக்குளித்து வர கரப்பான், சொறி, தேமல் வரவே வராது.

சொறி சிரங்கிற்கு வயது முதிர்ந்த பூவரசு மரத்தின் பட்டையை கொண்டு வந்து இடித்துத் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் (சிறீ சூடாக்கி) குழைத்து தடவி வர சில நாள்களில் குணம் தெரியும்.

சந்தனம், மிளகு, கற்பூரம் இம்மூன்றையும் சமஅளவு எடுத்துரைத் சிரங்கின் மேல் பூசி வர குணமாகும்.

பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயறு. கோதுமைத் தவி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்துப் பொடியாக்கி உடலில் தேய்த்து குளித்து வர தேமல் போன இடம் தெரியாது.

ரணம். சொறி, சருமப் புண்கள் குணமாக அரசமரத்துப் பட்டைல் எடுத்துலர்த்தி தூளாக்கி இரும்பு வாணவியில் இட்டுக் கருக்கி தூளாக் வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவலாம்.

சொறி, சிரங்குகளுக்கும், பித்த மிகுதியால் வரும் நமைச்சலுச் பொன்னாவரை இவையை சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து பூசி 15 நிமிடம் ஊற பாசிப் பயிறு மாவு தேய்த்துக் குணமாகும்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img