ஆரோக்கிய சமையல்: ராயல் பிடிகொழுக்கட்டை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
rayal pidi kozuukatai
rayal pidi kozuukatai

ராயல் பிடிகொழுக்கட்டை

தேவையானவை:
பிளெய்ன் கார்ன் ஃப்ளேக்ஸ் (அ) ஓட்ஸ் – ஒரு கப்,
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி,
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்,
உப்பு – சிறிது,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன், தக்காளிச்சாறு – கால் கப்,
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
துருவிய கேரட் – கால் கப்,
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்.

செய்முறை:
கார்ன் ஃப்ளேக்ஸ் (அ) ஓட்ஸை ஒன்றிரண்டாக மிக்ஸியில் உடைத்து தக்காளிச்சாற்றில் ஊறவைக்கவும். முருங்கைக்கீரையை அலசி, ஆய்ந்து வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தக்காளிச்சாற்றில் ஊறிய கார்ன் ஃப்ளேக்ஸைப் போட்டு, அத்துடன் இஞ்சி விழுது, உருக்கிய நெய், முருங்கைக்கீரை, பச்சை மிளகாய், உப்பு, சீரகத்தூள், துருவிய கேரட், தனியாத்தூள் போட்டு பிசிறி உருண்டைகளாக பிடித்து, ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். இதற்கு சைட் டிஷ் தேவையில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.