அப்பாச்சி தீர்வு: நாற்றம் நீங்க, வாந்தி, ஞாபகசக்தி, கால்வெடிப்பு..!

Published:

health tips - 2026

நாற்றம் நீங்க…

கண்டங்கத்திரி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி உடலில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்க நாற்றம் நீங்கும்.

வாந்திக்கு…

வெங்காயத்தை தோலுரித்து விட்டு முகர்ந்து பார்க்க அல்லது அப்படியே வாயில் போட்டு மென்று தின்றாலும் வாந்தி வருவது நின்றுவிடும்.

ஞாபக சக்தி பெருக…

தினசரி ஒரு கரண்டி தேன். இரண்டு கரண்டி, பால், இரண்டு கரண்டி கேரட் சாறு கலந்து பருகி வர ஞாபக சக்தி பெருகும்.

கால் வெடிப்புக்கு…

இலுப்பை எண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் தடவி வர வெடிப்புகள் மறையும்.

பன்னீரின் பயன்

சில துளிகள் பன்னீரை கண்களில் விட்டுக் கொள்ள கண்கள் புத்தொளி பெறும். முகப்பருவுக்குப் பன்னீரால் முகம் கழுவலாம். பன்னீரைத் தடவிக் கொண்டு பவுடர் பூசினால் அதிக வாசனையும் அதிக நேரம் கலையாமலும் இருக்கும்.

Related articles

Recent articles

spot_img