karamani rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காராமணி ரைஸ்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
karamani rice - 2026

காராமணி ரைஸ்
தேவையானவை:
அரிசி – ஒன்றரை கப்,
காராமணி – அரை கப்,
வெங்காயம், தக்காளி – தலா 1 (பொடியாக நறுக்கவும்),
சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வறுபட்டதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு, தக்காளித் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும். வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.