அப்பாச்சி தீர்வு: சீதபேதி, தேவையற்ற முடி, விரை நீக்கம், பித்தநீரை, கர்ப்பிணி..!

Published:

health tips - 2026

நாள்பட்ட சீத பேதிக்கு…

நிழவில் உவர்த்திய மாம்பூ கொண்டு கஷாயம் தயாரித்து காலை. மாலை அரை டம்ளர் பருகிவர நாள்பட்ட சீதபேதி குணமாகும்.

கர்ப்பிணிகளுக்கு…

உணவில் அடிக்கடி முள்ளங்கி, முருங்கைக்கீரை, நெல்லிக்காய் சேர்த்து வர கை, கால், பாதம் வீக்கம் ஏற்படாது. சிறுநீர் தாராளமாக இறங்கும். பிரசவமும் எளிதாக இருக்கும்.

பித்த நரை சரியாக…

அதிமதுரத்தை பொடி செய்து, கசகசா பொடியுடன் சேர்த்து பசும் பாலில் குழப்பி தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து வாரம் இருமுறை குளித்து வர நாளடைவில் பித்த நரை சரியாகும்.

விரை வீக்கத்திற்கு…

முற்றிய தேங்காயின் துருவலை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டுடன் விரை வீக்கம் உள்ள பகுதியில் வைத்துக் கட்டினால் வீக்கம் வடிந்து விடும்.

முடி வளர்ந்து தொல்லையா?

தேவையற்ற இடங்களில் முடி வளர்ந்து தொல்லை கொடுத்தால் பொன்னாகாரம் என்ற நாட்டு மருந்து சந்தனக் கல்லில் நீர்
விட்டுரைத்து, வரும் குழம்பை முடியுள்ள இடங்களில் பற்றுப்போட்டு
மறுநாள் வெந்நீர் விட்டுக் கழுவ தேவையற்ற முடி உதிர்ந்து விடும்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

Related articles

Recent articles

spot_img