health tips - 2026

அப்பாச்சி தீர்வு: பல்வலிமை, இதயபலவீனம், ஹிஸ்டீரியா, தளர்ச்சி, வீக்கம், சிறுநீரோடு தாது..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

எட்டி மர மருத்துவம்

எட்டி மரத்தின் பட்டையையோ அல்லது அதன் வேரையோ கொண்டு வந்து 50 கிராம் எடைக்கு பத்து அவுன்ஸ் நீர் விட்டு பாதியாகக் காய்ச்சி காலை, மாலை ஓர் அவுள்ஸ் சாப்பிட்டு வர இருதய பலவீனம் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் ஹிஸ்டீரியா நோய் விலகும். இது மூளை, நரம்புகளுக்கு நல்ல பலமளிக்கும். இரத்தத்தை விருத்தியடையச் செய்யும்.

பல் வலிமை பெற

எள்ளை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட பல் வலிமை பெறும். பல் விழுவதையோ ஆட்டம் காண்பதையோ தடுக்கும்.

வீக்கம் சரியாக…

காட்டாமணக்கு இலையையும் வேரையும் அரைத்து வீக்கங்களுக்கு பற்று போட்டு வந்தால் வீக்கம் உடனே குணமாகும்.

சிறுநீரோடு தாது வெளியாகிறதா?

ஏலக்காயை மிதமாக சில நாள்கள் சாப்பிட்டு வர சிறுநீரோடு தாது வெளியேறுவது நிற்கும்.

தளர்ச்சி நீங்க…

செம்பருத்தியின் மலராத இளம் மொக்குகளை பறித்து உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகையளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர அதிபோகத்தால் உண்டான உடல் தளர்ச்சி மறையும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.