health tips - 2026

அப்பாச்சி தீர்வு: சளிக்கட்டு, ஆஸ்துமா, வறட்டு இருமல்,

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

வறட்டு இருமல்

அதிமதுரத்தை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளையும் அரை தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெது வெதுப்பான வெந்நீர் அருந்தினால் வறட்டு இருமல் அகலும்.

இருமல், சளி குணமாக

தினந்தோறும் காலையில் மூன்று விரல் அளவு மிளகை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதை தேனில் குழப்பி வெந்நீருடன் அருந்த வேண்டும். இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்தால் இருமல், சளி குணமாகிவிடும்.

சளித்தொல்லை அகல

இரண்டு பச்சை வெங்காயத்தை ஐந்து மிளகுடன் சேர்த்து உண்டுவர சளித்தொல்லைகள் அகலும்.

ஆஸ்துமா நோய்

வெள்ளைப் பூண்டினை வேகவைத்து பாலுடன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்துவர ஆஸ்துமா நோய் குணமாகும்.

நெஞ்சில் சளிக்கட்டு

துளசி இலைகளை நிழலில் உலர்த்தி இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தையும் பொடிப் பொடியாய் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தமான பசுவின்பால் 100 கிராம், பனங்கற்கண்டு 200 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இவை அனைத்தையும் இரும்புச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து லேசான நெருப்பில் சூடாக்க வேண்டும். அதனுடன் போதுமான அளவு நெய்யை ஊற்றிக் கிண்ட வேண்டும்.

லேகியம் பதத்திற்கு வந்தபின்னர் இறக்கி வைத்து கண்ணாடி சீசாவில் பத்திரமாக வைக்க வேண்டும். தினமும் இருவேளை ஒரு கொட்டைப்பாக்கு அளவுக்கு லேகியத்தை உண்டு வந்தால் அனைத்துவித இருமலும், சளிக்கட்டும் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.