health tips - 2026

அப்பாச்சி தீர்வு: விக்கல், வாந்தி, நெஞ்சு எரிச்சல், வாயு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

விக்கல்

திப்பிலியை ஒரு ரூபாய் எடை அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குச் சம அளவில் இந்துப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்விரண் டையும் தூளாக்கி துணியில் சலித்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நான்கு மணி நேரத்திற்கு ஒரு தடவை இரண்டு தேக்கரண்டி அளவு இந்தத் தூளை உண்டுவர ஓயாத விக்கல் குணமாகும்.

அடிக்கடி உண்டாகும் விக்கல்

இந்துப்பையும், திப்பிலியையும் அரை ரூபாய் எடை அளவுக்கு நிறுத்து எடுத்துக்கொண்டு, இடித்து தூளாக்கிக் கொள்ள வேண்டும். சுத்தமான துணியில் அதை சலித்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து உண்ண வேண்டும். அவ்வாறு செய்தால் மூன்றே தினங்களில் அடிக்கடி உண்டாகும் விக்கல் நோய் குணமாகிவிடும்.

வாந்தி நிற்க

வெங்காயத்தின் தோலை உரித்து சிறிது நேரம் முகர்ந்தால் வாந்தி நின்றுவிடும்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

நெஞ்சு எரிச்சல்

பிரண்டையைத் துண்டு துண்டாக நறுக்கி, மிளகு, பூண்டு, சீரகம், உளுந்து இவைகளைச் சம அளவாய் எடுத்து அரைத்து துவையல் செய்து உண்டாவ் நெஞ்சு எரிச்சல் அகலும்.

பித்தவாயு நெஞ்சுவலி

முருங்கைக் கீரையையும் எள்ளையும் சேர்த்து அவித்து ஒரு கைப்பிடி அளவு உண்டு வந்தால் நெஞ்சுவலி அகலும். ஆனால் தொடர்ந்து 21 நாட்கள் அவ்வாறு உண்ண வேண்டும்.

பித்தவாந்தி

சின்ன வெங்காயத்தை வதக்கி உண்டாலும், முகர்ந்தாலும் பித்தவாந்தி அகலும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.