health tips - 2026

அப்பாச்சி தீர்வு: பித்தக் காய்ச்சல், குளிர்காய்ச்சல், வயிற்றுப் போக்கு, முறைக்காய்ச்சல்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

பித்தக்காய்ச்சல்

நற்சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு ஆகிய ஒவ்வொன்றையும் ஒரு ரூபாய் எடை அளவுக்கு எடுத்து உரலில் இட்டு நன்றாகப் பொடி செய்துகொள்ளவேண்டும். அதன்பின் துணியில் சலிக்கவேண்டும். கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

காலையிலும், மாலையிலும் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து அதை பொடி செய்த சர்க்கரையில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு உண்டு வந்தால் பித்தக்காய்ச்சல் குணமாகும்.

குளிர்காய்ச்சல்

துளசி இலையின் சாறு 50 கிராம் எடுத்து உப்புடன் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயால் எரித்துக் காய்ச்சவும். காய்ச்சிய சாற்றை நான்கு நாட்களுக்கு இரு தேக்கரண்டி அளவு வீதம் தினமும் இருவேளை அருந்திவர நோய் குணமாகும். நோயின் கடுமைக்குத் தக்கபடி மருந்துண்ணும் அளவையும், வேலைகளையும் அதிகரித்துக்கொள்ளவேண்டும்.

அஸ்திசுரம், வயிற்றிளைச்சல்

துளசி இலையின் சாற்றை அதிகாலையில் வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி வீதம் 48 நாட்கள் அருந்திவந்தால் அஸ்திசுரம், வயிற்றிளைச்சல் முதலிய நோய்களிலிருந்து விடுபடமுடியும்.

முறைக்காய்ச்சல் குணமாக

மூன்றுகிராம் மிளகுப்பொடியுடன் இரண்டு தேக்கரண்டி அளவு துளசிச் சாற்றைக்கலந்து கலக்கி தினம் அதிகாலை 1 டம்ளர் வீதம் அருந்திவர முறைக்காய்ச்சல் குணமாகும்.

குழந்தைகள் வயிற்றுப்போக்கு

குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு குணமாசு பின்வரும் முறையைப் பின்பற்றலாம்.

ஜாதிக்காயையும், மாசிக்காயையும் அம்மியில் உரைத்து ஒரு பட்டாணி அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு அதை வெந்நீரில் கலந்து தினமும் இருவேளை புகட்டிவந்தால் வயிற்றுப்போக்கு குணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.