health tips - 2026

அப்பாச்சி தீர்வு: மஞ்சள் காமாலை, இரத்தப்பேதி, வயிற்றுவலி, கிராணிக்கழிச்சல்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

மஞ்சள் காமாலை

கீழ்வா நெல்லி என்றழைக்கப்படும் கீழ்க்காய்நெல்லியை நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையாக்கிவைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை என தினம் இரண்டுவேளை இரண்டு அல்லது மூன்று உருண்டைகளை பசும்பாலுடன் கலந்துஉண்டுவரவும், நோய் கடுமையாக இருந்தால் இரண்டு. மூன்று திப்பிலியை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

கீழ்வா நெல்லிச் செடியை வேருடன் பிடுங்கிவந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து இடித்துச்சாறு எடுக்கவேண்டும். இடித்த சாற்றில் 1/2 அவுன்ஸை, இரண்டு அவுன்ஸ் பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்திவர மஞ்சள் காமாலை குணமாகும்.

கிராணிக்கழிச்சல்

கிராம்பு, கடுக்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய ஒவ்வொன்றையும் ஒரு ரூபாய் எடை அளவுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றை ஒரு புதுச்சட்டியில் போட்டு சிவப்பாகும் வரை வறுக்கவேண்டும். அதன்பின் அவற்றை உரலில் போட்டு இடிக்கவேண்டும். இடித்ததூளை துணியில் சலித்தபின் கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் மூன்றுவேைைள உணவுக்குப்பின்னர் இந்தப் பொடியில் மூன்று தேக்கரண்டி அளவு எடுத்து அதை ஒரு தேக்கரண்டி வெண்ணையில் குழைத்து உண்டுவந்தால் கிராணிக் கழிச்சலில் குணமேற்படும்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

இரத்தபேதி

கடுக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை இவை ஒவ்வொன்றையும் அரை ரூபாய் எடை அளவுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு இவை மூன்றையும் சட்டியில் இட்டு வறுத்து பட்டுப்போல தூள் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் இருவேளை அரைத்தேக்கரண்டி அளவு பசும் நெய் சேர்த்துச் சாப்பிட்டுவர சீதபேதியும், இரத்த பேதியும் குணமாகும்.

வயிற்றுவலி

மிளகு, ஓமம், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு அவைகளைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் இருவேளை உண்டு வெதுவெதுப்பான வெந்நீர் அருந்திவர வயிற்றுவலி குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.