health tips - 2026

அப்பாச்சி தீர்வு: வெண்குஷ்டம், சிறுநீரகக்கல், கல் அடைப்பு, பித்த வெடிப்பு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

சிறுநீர்க்கல்

வெள்ளரிக்காயின் விதைகளை சிறிது நீர் விட்டு அரைத்து சாறெடுக்கவும். இதன் விதைகளுடன் வாதுமைப் பருப்பைப் பாலில் அரைத்து பாலில் கலந்து வைத்துக்கொள்ளவும். முன்சொன்ன விதைச் சாற்றையும் பின் சொன்ன பால் கலவையையும் சேர்த்துக் கலக்கி தினமும் மூன்று வேளை தொடர்ந்து காலை, பகல், மாலை என இருபது நாட்கள் குடித்துவர சிறுநீர்த்தடை, சிறுநீர் சுருக்கு, உடல் இளைப்பு, பலகீனம், ஞாபகமறதி அகன்று உடல் செழிப்புறும்.

சிறுநீர் நோய்

மூன்று கிராம் ஓமம், ஆறு கிராம் எள், ஆறு கிராம் சீனி இம்மூன்றையும் எடுத்து சூரணமாக்கி தினமும் இருவேளை காலை, மாலை ஐந்துகிராம் வீதம் உண்டுவர மூன்றே நாளில் அதிகமாய் சிறுநீர் போவது, சொட்டு சொட்டாய் சிறுநீர் வெளிவரல் போன்ற சிறுநீர் நோய்கள் குணமாகும்.

சிறுநீர் கல் அடைப்பு

வெள்ளரி விதையை ஆவின்பாலில் அரைத்து ஒரு டம்ளர் அளவு தினமும் இருவேளை காலை, மாலை உண்டுவர மூன்றே நாளில் சிறுநீர் அடைப்பு, சிறுநீரக கல் அடைப்பு, சதை அடைப்பு, நீர்த்தாரை எரிவு முதலிய நோய்கள் குனமாகும்.

பித்த வெடிப்பு

மாமரத்துப் பிசினை எடுத்து பித்த வெடிப்புள்ள இடங்களில் தடவிவர பித்த வெடிப்புக்கள் குணமாகும்.

அல்லது உப்பையும், செம்மறி ஆட்டின் சாணி, அரசமரத்தின் பட்டை இவைகளைத் தனித்தனியே 25 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 100 கிராம் எருக்கம்பூக்களை சேர்த்து இடிக்கவும். இடித்த இப்பொடியை துணியில் முடிந்து ஒத்தடம் கொடுத்துவர பித்த வெடிப்பு அகலும்.

வெண் குஷ்டம் மாற

வெள்ளைப்பூண்டு, நவச்சாரம் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து அரைத்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரு நேரங்களிலும் வெண் குஷ்டமுள்ள இடங்களில் தடவி வந்தால் அது தானாகவே மாறிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.