
வீட்டு வைத்தியத்தில், வெந்தயத்துக்கு தனியிடம் உண்டு. வெந்தயம் சமையலில் பலவாறாக பயன்படுத்தப் படுகிறது. உடலாகிய இக்காயத்தை சிறப்பாக வைத்திருக்க வெந்தயம் உதவுகிறதே!
பலர் வீட்டில் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்குவதைச் சொல்லியிருப்பார்கள். சிலர் அப்படியே விழுங்குவதும் வழக்கம். சிலர் வெந்தயத்தை ஊற வைக்காமல் காலையில் வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் பருகி விழுங்கி விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள் .
வெந்தயத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமையல் பொருள்களில் சேர்த்து பயன்படுத்துகிறோம். இந்திய சமையலில் இன்றியமையாத ஐட்டம் வெந்தயம்.
நாம் மூலிகைகளில் பயன்படுத்தக்கூடிய வெந்தயத்தை உணவுப்பொருள்களில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இரவில் வெந்தயயத்தை ஊற வைத்து, மறு நாள் காலை அதை அந்த நீருடன் அருந்தி வருவதால்…
► உடலில் அமிலத்தன்மைகளை சரி செய்ய உதவுகிறது.
► நெஞ்செரிச்சல் சரி ஆகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது.
► நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
► உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியடையச் செய்கிறது.
► மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்னைகளை குணமாக்குகிறது.
► உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.
► பக்கவாதம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.
► பெண்களுக்கு மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது.
► ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. “
வெந்தயம் அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறையத் தொடங்கும்.
அதிகமாக வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சிலருக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும்.
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் அதிக அளவில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சைனஸ் பிரச்சினையால் சளி இருமல் அதிகமாகும்.
காலை வெறும் வயிற்றில் இரவே ஊறவைத்த வெந்தயம் ஒரு டீஸ்பூன், சீரகம் இரண்டு சிட்டிகை மென்று சாப்பிட்டு அந்த நீரையும் பருகுவது நல்லது. சளி பிடிக்காது.
வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் இவை மூன்றையும் வறுத்து, நன்றாகப் பொடி செய்து, ஒன்றாக்கிக் கலந்த பொடியை ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் நீரில் கலந்து, ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் துணையாக இருக்கும்.