காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு… பெயர்: ப.சிதம்பரம்; வயது: 73….

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

missing chidamabar - 2026

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ., அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வலைவீசித் தேடி வருவதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்த நிலையில், மாலை அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்று சம்மன் வழங்கினர்.

முன்னதாக, இன்று நடந்த விசாரணையில் உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும், அவரது வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்துவிட்டது. நாளை புதன்கிழமை விசாரிக்கப் படும் என்று கூறியது.

இந்நிலையில் சிதம்பரத்தின் தில்லி வீட்டுக்குச் சென்று  அவர் உடனடியாக ஆஜராகுமாறு சம்மன் கொடுத்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள். ஆனால் சிதம்பரம் வீட்டில் இல்லை என்று கூறப் பட்டது. இதை அடுத்து, அவர் காணாமல் போனதாகக் கூறப் படுகிறது.

ப.சிதம்பரம் குறித்து அவருக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவரும் வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வி, செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, ப.சிதம்பரத்தை தமது சேம்பரில் மாலை 6.30வரை தாம் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், தாம் உச்ச நீதிமன்றம் சிதம்பரத்தின் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று கூறியதை, தாம் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த போதுதான் கேள்விப் பட்டதாகவும், அதனால் முழு விவரம் தெரியாது என்றும் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.

cbi pc - 2026ப.சிதம்பரம் மீது கைது வாரண்ட் எதுவும் பிறப்பிக்கப் படவில்லை என்பதால், ப.சிதம்பரம் ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை என்றும், ப.சிதம்பரம் ஓடி ஒளியக் கூடிய நபர் இல்லை என்றும், அவர் சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் முன் எப்போதும் ஆஜராகியிருக்கிறார் என்றும் கூறினார் அபிஷேக் மனு சிங்வி.

இருப்பினும், இன்று இரவு ப.சிதம்பரம் கைது செய்யப் படுவாரா என்பது குறித்து உறுதியாக எதையும் கூற முடியாது என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.