மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான்கானின் வாக்குமூலம் இன்று பதிவு செய்யப்படுகிறது. ஊடகங்கள் தன் வாக்குமூலப் பதிவின்போது இருக்கக் கூடாது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. அரசுத் தரப்பில் ஏற்கெனவே சல்மான் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு எதிரான வாக்குமூலத்தை பதிவுசெய்ய அவருக்கு மும்பை நீதிமன்றம் வாய்ப்பளித்தது. அதன் அடிப்படையில் வாக்குமூலத்தை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் சென்றார் சல்மான் கான். அவர் கோரினால், அரசுத் தரப்பு சாட்சிகளிடமும் அவர் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். இந்நிலையில், அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டபோது, ஊடகங்களுக்கு தடை விதிக்க சல்மான் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் நடைபாதையில் உறங்கிய ஒருவர் உயிரிழந்தார், 4 பேர் படுகாயமடைந்தனர். காரை ஓட்டிச் சென்ற சல்மான் கான் மீது மரணத்தை விளைவித்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. விபத்து நேர்ந்த போது அவர் மது அருந்தி இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டா. சல்மான் கானுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மது அருந்தி கார் ஓட்டி விபத்து: சல்மான் கான் வாக்குமூலம் பதிவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari