மேக் இன் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பெட்டியில் மோடி..!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் தொழில்நுட்பம்
pm modi mumbai metro launch - 2026

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டியின் இயக்கத்தை பிரதமர் மோடி மும்பையில் தொடங்கி வைத்து அந்த அனுபவத்தை மக்களிடம் கேட்டறிந்தார்.

மும்பை விமான நிலையத்தில் வந்திங்கிய அவரை, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி (Bhagat Singh Koshyari) முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் மும்பை விலே பார்லேவில் உள்ள லோகமான்ய சேவா சங்க திலக் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.

தொடர்ந்து, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டி இயக்கத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

pm modi mumbai metro - 2026

மும்பையில் 42 கி.மீ., தொலைவுக்கான மேலும் 3 மெட்ரோ வழித் தடங்களுக்கான திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

modi temple - 2026

இந்த நிகழ்ச்சியில் பேசியபோது, இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியம் மற்றும் மன உறுதியைக் கண்டு தான் வியப்பு அடைந்ததாகவும், கடுமையான சவால்களையும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி எவ்வாறு முன்னேறுவது என தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

modi temple1 - 2026

முன்னதாக, பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து, சந்திரயான் 2 திட்டம் குறித்து பார்வையிட வந்திருந்த பிரதமர் மோடி, இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் மனம் விட்டுப் பேசி ஆறுதல் கூறினார். பின்னர் காலை பெங்களுரில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்றார்.

1 thought on “மேக் இன் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பெட்டியில் மோடி..!”

  1. இதை போன்ற ஒரு பிரதமர் இருப்பதை கண்டு நாம் பெருமை பட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.