இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா முதல் அத்தனை விருதுகளையும் வாங்கி குவித்தவர். . உலகிலேயே அதிக பாடல்களை பாடியவர் என்ற சிறப்பினை உடையவர் லதா மங்கேஷ்கர் வருகிற 28ந் தேதி தனது 90வது வயதை நிறைவு செய்கிறார்.
அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு அவருக்கு மேலும் ஒரு கவுரவத்தை வழங்க இருக்கிறது. தேசத்தின் மகள் (Daughter of the Nation) என்ற புதிய பட்டத்தை வழங்க இருக்கிறது.
ஏழு தசாப்தங்களாக இந்திய திரைப்பட இசையில் அவர் செய்த பங்களிப்புக்கு காணிக்கை செலுத்தும் விதமாக மங்கேஷ்கருக்கு இந்த தலைப்பு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிக்காக கவிஞர்-பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஒரு சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். பிரதமர் மோடி லதாமங்கேஷ்கரின் குரலுக்கு மிகப் பெரிய ரசிகராம்.
அவரது பிறந்த நாளன்று பார்லிமென்ட் வளாகத்தில் நடக்க இருக்கும் விழாவில் இந்த பட்டம் வழங்கப்படும் என்று தெரிகிறது. லதா அவர்களின் குரல் இந்த தேசத்தின் ஒட்டு மொத்த குரலாக ஒலிக்கிறது.
அதனால் அரசு அவருக்கு இத்தகைய சிறப்பினை வழங்கி பெருமைப் படுகிறது அதையே அவரது 90 வது பிறந்தநாளில் அதிகாரப்பூர்வமாக வழங்குவோம்” என்று ஒரு ஆதாரம் மிக்க தகவலை அரசாங்கம் கூறியது.