அனைவரும் என்னை குறி வைப்பார்கள்! பிவி சிந்து!

Published:

pv sindhu - 2026

டெல்லியில் நேற்று நடந்த ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது பி.வி.சிந்து அளித்த பேட்டியில், ” தற்போது நெருக்கடியும், பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு எல்லோரும் என்னை குறி வைப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

எனவே நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். உலக போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல 5 வருடம் போராடினேன். எல்லா முறையும் தோல்வியை சந்தித்தேன். எனது கடுமையான போராட்டமும், கடின உழைப்புக்கும் இந்த முறை பலன் கிடைத்தது.

இனி என் முன்னேற்றம் படிப்படியாக இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு நிறைய போட்டிகள் இருக்கிறது. நான் என்னுடைய சிறந்த ஆட்ட நிலையை தொடர வேண்டும். எனது அடுத்த இலக்கு அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே ஆகும்.

எனது ஆட்ட திறன் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. தேவையற்ற நெருக்கடிகளை என் மீது திணிக்க விரும்புவதில்லை, எனது ஆட்ட திறனில் உண்மையிலேயே நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறேன் ” என்று கூறினார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img