December 1, 2021, 7:02 pm
More

    அஜித்தின் இடத்தை பிடிக்க முயற்சிக்கும் தனுஷ்!

    ajith - 1

    இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக் ஆக உருவான படம் நேர் கொண்ட பார்வை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்தார். வினோத் இயக்கினார். தமிழில் அஜித் அமிதாப்பின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

    அடுத்து அஜீத்துக்காக புது ஸ்கிரிப்ட் உருவாக்கி அஜித் 60 என தற்பொழுதைக்கு பேர் வைத்து வினோத் இயக்க உள்ளார். இதற்கிடையில் போனிகபூர் இந்தியில் ஹிட்டான ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார்.

    thanush as - 2

    சவாலான வசனங்கள் நிறைந்த நேர் கொண்ட பார்வை ரீமேக்கில் நடித்ததுபோலவே ஆர்ட்டிக்கிள் 15 படத்திலும் அஜீத் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று போனிகபூர் கருதுகிறார்.

    ஏற்கனவே போனிகபூருக்கு 3 படங்களில் நடித்து தருவதாக அஜீத் கூறியிருப்பதால் இந்த படத்திலும் அவரை நடிக்க கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்து நேரடி படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்படம்பற்றி முடிவெடுக்கலாம் என்று அஜீத் கூறிவிட்டதாக தெரிகிறது.

    அஜீத்தையே இப்படத்தில் நடிக்க கேட்பதற்கு காரணம் ஆர்ட்டிகள் 15 கதை இந்திய சட்டப் பிரிவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்கிரிப்ட். இதிலும் அதிரடியான வசனங்கள் இடம் பெறும் அதை அஜீத் பேசினால் ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறார்களாம். ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக்கில் நடிக்க நடிகர் தனுஷும் ஆர்வமாக உள்ளாராம்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    369FollowersFollow
    46FollowersFollow
    74FollowersFollow
    1,766FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-