4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு! முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
four judges - 2026

உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.

உச்ச நீதிமன்ற பதவிகளுக்கு இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ராமசுப்பிரமணியன், பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரவீந்திர பட் மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்த நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து நான்கு பேரும் உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் எளிமையான முறையில், நீதிமன்ற அறையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இந்த நிலையில் தற்போது ராமசுப்பிரமணியன் பதவி ஏற்பதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.