
உதய் அண்ணா இருக்கும் போது, விஜய் அண்ணாவை தலைவன் வர்றான்னு சொல்லி மேடையில ஏத்தி விட அவங்க என்ன ஃப்ரீ சர்வீஸா நடத்துறாய்ங்க…! என்று பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடைபெற்ற விவகாரம் குறித்து காரசாரமாக பதில் கொடுக்கிறார்கள் டேனியல் பாலாஜிக்கு!
பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் கட் செய்யப்பட்ட தனது பேச்சை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் டேனியல் பாலாஜி.

முன்னதாக, நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், விஜய் அண்ணாவைப் பற்றி நான் பேசியதிலிருந்து, சன் டிவி ஒரு பகுதியை வெட்டியுள்ளது – என்று கூறியிருந்தார். அதற்கு பலரும் நீங்களாவது அந்த விடீயோவை பகிருங்கள் என்று கேட்டுக் கொண்டனர்
இதை அடுத்து, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு கருத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், @bigil @archanakalpathi @Ags_production @rangarajan_ags @Atlee_dir @actorvijay @arrahman ஒரு ரசிகராக, அரசியல் இல்லாமல் ….
அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை – மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தீபாவளிக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதை சன் டிவி நேற்று ஒளிபரப்பியது. இந்த ஒளிபரப்பில் பல விஷயங்கள் கட் செய்யப் பட்டதாக சிலர் குமுறுகின்றனர். விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் டேனியல் பாலாஜி, விஜய் குறித்து தான் இசைவெளியீட்டு விழாவில் பேசியதில் ஒரு பகுதியை சன் டிவி, வெட்டி விட்டதாக தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், பலரும் ஆமாம் போட…. இதை அடுத்து ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கையை ஏற்று, அந்த விழாவில் தாம் பேசியதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டேனியல் பாலாஜி.
அதில், “ ஒரு ரசிகராக, அரசியல் இல்லாமல் என் உரையில் நான் சொன்னது. விஜய் அண்ணா சக நடிகருக்கு ஒரு பாதுகாவலர். எனக்கு ஒரு நல்ல நண்பர். பெற்றோருக்கு ஒரு நல்ல மகன். அதேபோல் அவரது இதயத்தில் வாழும் ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல தலைவர். விரைவில் வருவார்” என்று கூறியுள்ளார்.
SPARTAN™@Immuraliraj @DanielBalaje @archanakalpathi மனசுல இருக்குறத சொல்லியிருக்கீங்க.. கண்டிப்பா அவர் வந்தா பயப்படுறவங்க தான் நீங்க பேசுன பேச்சை எடிட் பண்ணி கட் பண்ணி விட்டுருப்பாங்க… – என்ற் கொடுத்த பதிலும் அதனைத் தொடர்ந்து வந்த பதில்களும்தான், சன் டிவி ஏன் அதனை கட் செய்தது என்று பலரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர்.
அட… உதய் அண்ணா இருக்கும் போது, விஜய் அண்ணாவை தலைவன் ரேஞ்சுக்கு புகழுறதையும் பிகிலு காட்டுறதையும் சன் டிவில., போட்டு பப்ளிகுட்டி கொடுப்பாய்ங்களா என்ன..!? சுத்த வெவரம் தெரியாத ஆளா இருக்கியேப்பா… டேனியல் பாலாஜி..!



