
காந்தேரி நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் செப். 28-ஆம் தேதி இணைக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த கப்பலை கடற்படையிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:நமது கடர்படையில் தற்போது இடம்பெற்றுள்ள புதிய இணைப்புகள் அனைத்தும் மிகப்பெரிய அளவிலான திறன் கொண்டது. இதன்மூலம் இந்தியா, பிரான்ஸ் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்திய தயாரிப்பு அடைப்படையில் இந்த கப்பல் கட்டுமானம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இன்றி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. கடல்வழி அச்சுறுத்தல்களை நமது கப்பல் படை திறம்பட எதிர்த்து செயல்பட்டுள்ளது. ஒரு நாட்டின் கடல் வழி பாதுகாப்பானால் மட்டும் தான் அங்கு அதிகளவிலான வணிகம் நடைபெறும்.
இனிவரும் காலங்களில் கடல் வழியில் பயங்கரவாதத்தை பரப்ப நினைக்கும் பாகிஸ்தானின் திட்டம் நிறைவேறாது. மேலும் இந்திய பாதுகாப்புப் படைகள் பலப்படுத்தப்பட்டு வருவதால், அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் நாங்கள் எடுத்து வரும் முற்போக்கான நடவடிக்கைகள் உலகளாவிய ஆதரவைப் பெறுகின்றன. ஆனால் பாகிஸ்தான் வீட்டுக்கு வீடு சென்று காமடித்தனமான நடவடிக்களை உருவாக்கி வருகிறது
காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலில் நீருக்குள் செலுத்தும் ஏவுகணைகளும், நீருக்குள் இருந்து நீருக்கு வெளியே உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளும் உள்ளன. இதன் மூலம் எதிரிகளின் கப்பல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றின் மீது இந்த நீர்மூழ்கிக் கப்பலால் தாக்குதல் நடத்த முடியும்.
இந்திய கடற்படையில் இடம் பெறும் இரண்டாவது ஸ்கார்பீயன் வகை நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். முன்னதாக, கடந்த 2017-ஆம் முதல் பிரதமர் நரேந்திர மோடி, ஐஎன்எஸ் கல்வாரி என்ற பெயரிலான முதல் ஸ்கார்ப்பீயன் வகை கப்பலை கடற்படையிடம் ஒப்படைத்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
கடந்த 2005-ஆம் ஆண்டு பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அந்நாட்டு தொழில்நுட்பத்துடன் மும்பையில் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு முதல் நீர்மூழ்கிக் கப்பலான கல்வாரி கடந்த 2017-ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது.
இப்போது 2-ஆவது கப்பல் இணைக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து கப்பல்களும் கட்டி முடிக்கப்பட்டு விடும். இப்போது இத்திட்டத்தின் மதிப்பு ரூ.25,000 கோடியாகும்
Mumbai: Defence Minister Rajnath Singh arrives for commissioning ceremony of the second Kalvari-class Submarine INS Khanderi. pic.twitter.com/mbnSTZbRk1
— ANI (@ANI) September 28, 2019
Defence Minister Rajnath Singh at Commissioning of INS Khanderi in Mumbai: Pakistan should understand that today with strong resolve of our government and advancement in naval capacity with additions like INS Khanderi, we are capable of giving much bigger blow to it. pic.twitter.com/ShkY5sugxX
— ANI (@ANI) September 28, 2019
Defence Minister Rajnath Singh: I am very pleased to be present here on the occasion of the commissioning ceremony of INS Khanderi. The name Khanderi is inspired by the dreaded ‘Sword Tooth Fish,’ a deadly fish known to hunt whilst swimming close to the bottom of the ocean. https://t.co/MOdeVXnu6Y pic.twitter.com/ELUVMiRthK
— ANI (@ANI) September 28, 2019
Defence Minister Rajnath Singh in Mumbai: The progressive steps we are taking in Jammu and Kashmir are receiving global support. But Pak has been going door to door &creating content for cartoon makers pic.twitter.com/MLfi8MsZWS
— ANI (@ANI) September 28, 2019



