கடலைப் பருப்பு சுண்டல்—-நவாத்திரி ஸ்பெஷல்
…….29-09-2019(முதல்நாள்)
நவராத்திரி ஞாயிற்றுக்க்கிழமை-சற்று ஈசியானது
நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)
கடலை பருப்பு சுண்டல்
தேவையான பொருட்கள்
:கடலை பருப்பு : 1 டம்ளர்
பச்சை மிளகாய் : 3 Nos.
கடுகு : 1/2 டி ஸ்பூன்
பெருங்காயப்பொடி : 1/4 டி ஸ்பூன்
உப்பு : ருசிகேற்ப
எண்ணை : 1 டி ஸ்பூன்
கருவேப்பிலை : 1 ஆர்க்கு
தேங்காய் : 1 சிறிய கப்
துருவியது
செய்முறை
:குக்கரில் கடலைப்பருப்பை போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விடவும்.பிறகு நீரை வடித்து விடவும்.வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளிக்கவும்.பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பருப்பை சேர்த்து வதக்கி, உப்பு, பெருங்காயப் பவுடர், தேங்காய் சேர்த்து வதக்கவும்.கடைசியாக கருவேப்பிலை பிய்த்து போட்டு இறக்கவும்.சுண்டல் ரெடி



