ஆர்டிசி விவகாரம்: வென்றது யார்? ஜகன் அரசியல் வியூகத்தில் விழி பிதுங்கிய ராவ்!

Published:

kcr jagan - 2026
கோப்புப் படம்

இரு தெலுங்கு மாநிலங்களில் ஆர்டிசி விவகாரத்தில் வென்றது யார்? ஷாக் தின்றது யார்? ஜகனின் அரசியல் வியூகத்தால் அதிர்ந்து நிற்கும் சந்திரசேகர ராவ்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஒப்பிட்டால் ஜகனின் அரசியல் அனுபவம் மிகவும் குறைவே! அப்படியிருக்கையில் ஜகன் வகுக்கும் அரசியல் வியூகத்தில் டிஆர்எஸ் சிக்கித் தவிக்கிறதா?

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் ஆர்டிசி நஷ்டத்தில்தான் ஓடுகிறது. இது பல ஆண்டுகளாக உள்ள நிலைமை. ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சரி கட்டுவதற்கு அரசாங்கமே நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களை அளிக்கும் சூழல் நிலவுகிறது.

இதையெல்லாம் கவனித்த ஆந்திரா முதல்வர் ஜெகன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆர்டிசியை அரசாங்கத்தோடு இணைந்து விடுவதாக வாக்களித்தார். அதே போல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் ஆந்திரா ரோடு டிரன்ஸ்போட் கார்பொரேஷனை அரசோடு இணைத்ததுடன் அதன் பணியாளர்களையும் அரசாங்க பணியாளர்களாக அறிவித்தார்.

அதனால் ஆர்டிசி பணியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இத்தனை நாட்களாக பட்ட கஷ்டங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து விட்ட சந்தோஷத்தில் தசரா பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

அதே நேரம்… தெலங்கானாவில் நிலைமை முழுவதும் தலைகீழாக மாறியது. ஆந்திரா போலவே தம்மையும் அரசாங்கத்தோடு இணைக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையோடு ஆர்டிசி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆந்திர அரசு எடுத்த முடிவு போலவே தெலங்கானா அரசும் முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு இருந்தபோதிலும் தெலங்கானா முதல்வர் கேசிஆர் வெவ்வேறு காரணங்களால் அதுபோல் முடிவெடுக்க ஒப்புக்கொள்ள மறுக்கிறார். தெலங்கானா முதல்வர் கேசிஆர் மட்டும் ஏன் இவ்வாறு முரண்டு பிடிக்கிறார் என்று ஆர்டிசி தொழிலாளர்கள் முதல்வரை கேள்வி எழுப்புகின்றனர்.

rtc telangana3 - 2026

இதற்கு ஒப்புக்கொண்டால் நாளை தெலங்கானாவில் ஆட்டோ டிரைவர்கள் கார் டிரைவர்கள் கூட இனி ஆரம்பிப்பார்கள் என்று எண்ணுகிறார் கேசிஆர். ஏனென்றால் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் அங்குள்ள ஆட்டோ டிரைவர்களுக்கும் கார் டிரைவர்களுக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளிப்பது போலவே தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் எண்ணுகிறது என்று தெரிகிறது .

அதனால் எந்தச் சூழலிலும் ஆந்திராவில் எடுக்கும் முடிவுகளை தெலங்கானாவில் எடுக்கக்கூடாது என்று கேசிஆர் தீர்மானமாக இருப்பதாகத் தெரிகிறது. உண்மையில் தெலங்கானா சிஎம் கேசிஆரோடு ஒப்பிட்டால் ஜெகனின் அரசியல் அனுபவம் மிகவும் குறைவே. அப்படியிருக்கையில் ஜெகன் வகுக்கும் வியூகத்தில் சிக்கி சந்திரசேகரராவ். அவஸ்தைக்கு ஆளாவதாகத் தெரிகிறது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஆந்திர அரசாங்கம் நல்ல முடிவுகளை எடுத்து வருகிறது என்றும் தெலங்கானா அரசு மட்டும் மக்கள் நலன் குறித்து சிந்திப்பது இல்லை என்றும் சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

ஆர்டிசி விஷயத்தில் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் வரை ஆந்திராவில் ஆர்டிசி பணியாளர்கள் போராட்டத்தின் வழி செல்ல மாட்டார்கள். ஒருவேளை போராட்டத்தை அறிவித்தால் பொதுமக்கள் அவர்களையே குற்றம் சாட்டுவார்கள்.

jagan writer - 2026

ஏனென்றால் அரசாங்கம் அவர்களை அரசு பணியாளர்களாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் அவர்களுக்கு அதுவே பெரிய வரம். அதைவிட வேறென்ன வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து. அதனால் ஆந்திராவில் ஆர்டிசி பணியாளர்கள் இனி போராட்டம் பந்த் போன்றவற்றில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் தெலங்காணாவில் இந்தச் சூழ்நிலை இல்லை.

கேசிஆர் ஒருவேளை ஒப்புக் கொண்டால் அதன் பலன் கேசிஆருக்கு அல்லாமல் ஜகனுக்குச் சென்று விடும் வாய்ப்பு உள்ளது என்பது டிஆர்எஸ் தரப்பு கருத்து. வேண்டுமென்றே செய்யாவிட்டாலும் ஜகன் எடுக்கும் முடிவுகள் தெலங்கானா அரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img