முதியவரின் கழுத்தை சுற்றி இறுக்கிய மலைப் பாம்பு! பிறகு…

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
hillsnake - 2026

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சில தொழிலாளர்கள் ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரியில் புல், புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது புவனச்சந்திரன் என்ற 58 வயது முதியவர் மைதானத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது மலைப்பாம்பு ஒன்று நகர்ந்து நெளிந்துகொண்டிருந்ததை பார்த்து அதனை அகற்ற முயற்சித்துள்ளார்.

இந்தநிலையில் புவனச்சந்திரன் அந்த பாம்பை பிடித்து சாக்குமூட்டையில் அடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் திடீரென அந்த மலைப்பாம்பு அவருடைய கழுத்து பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து நெரிக்க துவங்கியது. வலிதாங்கமுடியாத புவனச்சந்திரன் அலறல் சத்தம் போட்டுள்ளார்.

snake 1 - 2026

அருகில் இருந்தவர்கள் மிகவும் கடினப்பட்டு அந்த பாம்பை அவர் கழுத்திலிருந்து விடுவித்தனர். பின்னர் அதனை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.