
தனியார் நிறுவன பணிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தவார வேலைவாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடைபெறுகிறது.
சென்னையில் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் எட்டாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம் ஐடிஐ பாலிடெக்னிக் படித்தவர்களும் கூட இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.



