கலை நிகழ்ச்சிக்கு தயாரான கல்லூரி மாணவி! மேடையில் நடை பயின்ற போதே திடீர் மரணம்!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
student 2 - 2026

பெங்களூருவில் உள்ள பீன்யா பகுதியில் செயல்படும் தனியார் காலேஜ் ஒன்றில் எம்பிஏ படித்து வந்தவர் ஷாலினி (21). இவரது காலேஜில், ஃபிரஷர்ஸ் டே கொண்டாட்டம் நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி, அங்கு படிப்பவர்கள், பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஒத்திகை செய்து வந்திருக்கிறார்கள்.

மாணவி ஷாலினி, ஃபேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்க பெயர் கொடுத்துள்ளார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஷாலினிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு, அப்படியே கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார். இதைப் பார்த்ததும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுபற்றி காலேஜ் நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த காவல்துறையினர், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் எதிர்பாராத மரணம் பற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.