
முறைகேடாக வந்த பணத்தை பரிமாற்றம் செய்யும் போது பணத்தை திருடியதாக கூறி தன்னை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதி மீது அவரது உதவியாளர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், இவர் உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. பா.நீதிபதி – யிடம் எலெக்ட்ரிசியன் ஆக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று எம்.எல்.ஏ விட்டிற்கு சென்ற எனது மகன் முருகன் மற்றும் அவரது மனைவி சுமதி இருவரும் வீடுதிரும்பவில்லை என்றும் அங்கு அவர்களை அடித்து துன்புறுத்துவதாக முருகனின் தந்தை ராமர் என்பவர் முருகனின் இரு பெண் குழந்தைகளுடன் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
புகாரினை பெற்றுக்கொண்ட போலிசார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய சூழலில் சிறிது நேரத்திலேயே காவல் நிலையம் வந்த காணமல் போனதாக கூறப்பட்ட முருகன் சுமதி என்ற இருவரும்,
நான் எம்.எல்.ஏ.வின் உதவியாளராக உள்ளேன் எலெக்ட்ரிக் வேலைகளை செய்து வருகிறேன், அடிக்கடி எம்.எல்.ஏ-வுக்கு சூட்கேசில் பணம் என் மூலம் கைமாறிதாக கூறும் முருகன், நேற்று 2 கோடி மதிப்பிலான ஒரு பெட்டியை மர்ம நபர் கொடுத்து எம்.எல்.ஏ. நீதிபதியிடம் கொடுக்க சொன்னதாகவும் அந்த பெட்டியை எம்.எல்.ஏ-விடம் கொடுத்த போது அதிலிருந்து சுமார் 44 லட்சம் குறைந்தாக கூறி முருகனையும் அவரது மனைவி சுமதியையும் எம்.எல்.ஏ. வீட்டிற்கு வரவழைத்து அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக தெரிவித்து கண்ணீர் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உடலில் காயங்கள் இருந்தால் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள முருகன் சுமதி தம்பதிகள் குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.