இயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல் வீடியோ

divya darshini

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பவர் பாண்டி, சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி சூப்பட் ஹிட் ஆன ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தில் இடம் பெற்றா ‘முக்கத்து பெண்ணே’ பாடலை தமிழில் ஆல்பம் பாடலாக அவர் உருவாக்கியுள்ளார். இதை டிடியே தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். இப்பாடலை நிகில் மேத்யூ பாடியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து டிடி-க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.