
நாடு முழுதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் அன்பும், கவனிப்பும், ஆறுதலும் தேவைப்படுவோரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி தீபம் ஏற்றி, ஒளியேற்ற முயற்சிப்போம்.. என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, தனது மன்கி பாத் உரையில் தீபாவளிப் பண்டிகை குறித்து சிலாகித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து தமது டிவிட்டர் பதிவில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள். இந்த விளக்குகளின் திருவிழா நம் அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஒளியைக் கொண்டு வரட்டும். நம் நாடு எப்போதும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நன்மைகளுடன் ஒளிரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.