பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் காலமானார்!

Published:

geethanjali actresss - 2026

மூத்த நடிகை கீதாஞ்சலி வியாழக்கிழமை இன்று ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழித் திரைப்படங்களில் சிறப்பாக நடித்து நல்ல பெயர் வாங்கியவர் கீதாஞ்சலி.

என்டிஆர் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்த சீதாராமுல கல்யாணம் படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஆனார். அனைத்து மொழிகளிலுமாக 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் கீதாஞ்சலி.

கலவாரி கோடலு, டாக்டர் சக்கரவர்த்தி, லேத மனசுலு, இல்லாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் தெய்வத்தின் தெய்வம், வாழ்க்கைப் படகு, தாயின் மடியில் ,அதே கண்கள்,என் அண்ணன், அன்னமிட்ட கை ஆகியவை அவரது முக்கியமான படங்கள்.

actress geethanjali - 2026

கீதாஞ்சலி, கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடாவில் ஸ்ரீராமமூர்த்தி, சியாம சுந்தரி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். காகிநாடாவில் செயின்ட் ஜோசப் கான்வென்டில் படித்தார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

5 வயதிலிருந்தே கீதாஞ்சலி தன் சகோதரி சுவர்ணாவோடு சேர்ந்து கந்தர்வ நாட்யமண்டலியில் சேர்ந்து லட்சுமண ரெட்டி, சீனிவாசன் உள்ளிட்ட சிலரிடம் நாட்டியம் கற்றார். ஆறாவது வயதில் இருந்தே நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார்.

இவருடைய இயற்பெயர் மணி. 1963இல் பாரஸ்மணி என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும்போது அந்தப் படத் தயாரிப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த் பியாரிலால் சினிமா டைட்டிலில் மணி இருப்பதால் இவருக்கு கீதாஞ்சலி என்று பெயர் வைத்தனர். அதே பெயர் திரைத்துறையில் இவருக்கு நிலைத்து விட்டது.

சக நடிகர் ராமகிருஷ்ணாவை திருமணம் புரிந்த பின் நடிப்புக்கு சற்று ஓய்வு கொடுத்தார். சிறந்த குணசித்திர நடிகையாக மாறிய கீதாஞ்சலி திருமணமானபின் மாயாஜாலம் , பாய், க்ரீகு வீருடு போன்ற படங்களில் நடித்தார். கீதாஞ்சலியின் கடைசிப் படம், நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்த ‘தட் ஈஸ் மகாலட்சுமி’.

அரசியலில் நுழைந்த கீதாஞ்சலி 2009இல் ஆந்திரப் பிரதேச தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். என்டிஆரை தன் திரை குருவாக குறிப்பிடுவது வழக்கம் .

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

சீதாரமுல கல்யாணம் படத்தில் ஹீரோயினாக தன்னைத் தேர்ந்தெடுத்து சீதா பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தினார் என்று நெகிழ்ச்சியோடு கூறுவது வழக்கம்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img