பாகிஸ்தானுக்குப் போக … மத்திய அரசிடம் அனுமதி கோரி கெஞ்சும் சித்து!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
navjoth singh sidhu - 2026

கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தானுக்குச் செல்ல அனுமதி அளிக்குமாறு பஞ்சாப் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய நண்பருமான நவ்ஜோத் சிங் சித்து மத்திய அரசிடம் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு சித்து அனுப்பிய கடிதத்தில்…

இம்மாதம் 9-ஆம் தேதி கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில் குருநானக் தேவுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன். எனவே, பாகிஸ்தானுக்கு செல்ல எனக்கு அனுமதி வழங்க ஆவன செய்ய வேண்டும்… என்று கேட்டுள்ளார்.

சீக்கியா்கள் பாகிஸ்தானின் கா்தாா்பூரில் அமைந்துள்ள குருநானக் தேவின் குருத்வாராவுக்குச் செல்ல வசதியாக இந்தியாவும்-பாகிஸ்தானும் வழித்தடம் அமைத்துள்ளது.

01 Aug21 Sidhu - 2026

இந்த வழியாக குருத்வாராவுக்குச் செல்ல இந்திய யாத்ரீகா்கள் நுழைவு இசைவு (விசா) பெறத் தேவையில்லை. பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் நவம்பா் 9-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி கா்தாா்பூா் வழித்தடத்தை திறந்து வைக்கவுள்ளாா்.

இதற்கு முன்பு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சியில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றாா்! அதுவே முதல்வர் அம்ரீந்தருக்குப் பிடிக்காமல் போனது.

நவ்ஜோத் சிங் சித்துவிற்கும், முதல்வர் அமரீந்தருக்கும் உரசல்கள் அதிகம். இதனால்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து.

இந்நிலையில், கர்தார்பூர் குருத்வாரா விழாவில் பங்கேற்க, சித்துவிற்கு, பாகிஸ்தானிலிருந்து மீண்டும் அழைப்பு வந்துள்ளது. இது அமரீந்தருக்கு மீண்டும் எரிச்சலைக் கிளப்பியுள்ளது. எனவே அவர் மோடியை சந்தித்து விஷயத்தைச் சொல்ல, மத்திய அரசும் அவருக்கு செவி சாய்த்தது. அரசின் அனுமதியில்லாமல் எந்த ஓர் அரசியல்வாதியும், பாகிஸ்தான் செல்லக் கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதை அடுத்து, மத்திய அரசின் அனுமதி கோரி சித்து வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.