“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்” ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்

“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்”

ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்’)

(“இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா. வடக்கத்திக்காராளுக்கு  தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா”)

சொன்னவர்; டி.வி.சுவாமிநாதன் I.A.S. (ஓய்வு) தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.

புது டெல்லியில் இர்வின் ரோடிலுள்ள ‘ஹனுமான் மந்திரில்’ ஒவ்வொரு செவ்வாய்க்-கிழமையும், ‘மங்கள்’என்று கூறி பக்தர்கள் பெருந்திரளில் குழுமுவர். நீண்டு நிற்கும் ‘க்யூ’ வரிசையை மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை காணலாம்.ஆலயத்தின் நுழைவாயிலின் இருவசமும் மிட்டாய்க் கடைகள்.

பக்தர்கள் தொன்னைகளிலும், தட்டுகளிலும் லட்டு, பூந்தி,பேடா நிவேதிப்பதற்காக வாங்கிச் செல்வர். பண்டிட்ஜி, மணி ஒலித்து அர்ப்பணித்து நெற்றியில் சிந்தூரத் திலகமிடுவார். ‘ஜெய்ராம்ஜி’ என்ற த்வனி இரு செவிகளையும் நிறைக்கும்- குருவாயூரில்’நாராயணா’ உச்சாரணம் போல்.

ஒரு செவ்வாய்க்கிழமை மாலை ஹனுமான் மந்திரில் தரிசிக்கச் சென்றிருந்த நான் ஆஞ்சநேயருக்கு ஜிலேபிமாலை அணிவித்திருந்ததைப் பார்த்து வியப்புற்றேன்

. மறுநாள் சென்னை சேர்ந்து வழக்கம் போல் சின்னக்- காஞ்சி சிவாஸ்தானம் போனேன். காஞ்சி மாமுனிவர் தரிசனம் நாடி.
ஸ்ரீ பெரியவாளிடம் வடைமாலைக்குப் பதில் அனுமனுக்கு ஜிலேபி மாலை சார்த்தியிருந்ததை விவரித்தேன்.உடனே தவச்ரேஷ்டர் அத்வைத சிகரத்தை எட்டிவிட்டார்.

“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்” என்ற அருள்வாக்கால்.
ஆம், இரண்டுக்கும் ஆதார மூலப்பொருள் உளுந்து மாவுதானே !

உடனேயே நமது நிலைக்கு இறங்கி வந்து,
“இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா. வடக்கத்திக்காராளுக்கு தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா” என்றார்கள்.

‘என்னைக் காப்பாற்ற நீ நடந்து வந்தாயா ஸ்ரீ ராமா’ என்று கசி(னி)ந்துருகினார் தியாகப்ரம்மம். (நன்னு பாலிம்ப நடவச்சிதிவோ)

எங்களைக் காப்பாற்ற எழுந்து நடந்து வரவேண்டும் தயாநிதியே என்று எனது-நம்முடைய-பிரார்த்தனையுடன் இந்த நினைவு மலர்களை தவச்ரேஷ்டரின் பத்மபாதங்களில் அர்ச்சிக்கிறேன்

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories