
தெலங்கானாவில் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அப்துல்லாபுர்மெட் மண்டலத்தின் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி.
இன்று அவர் வழக்கம் போல அலுவலகத்துக்கு வந்தார்.
அவர் தனது பணிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்த மர்ம நபர், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் விஜயாவின் உடல் முழுவதம் தீ பரவியது. சம்பவ இடத்திலேயே அவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
கண் இமைக்கும் நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவம், அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.