காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் வழங்கிய ரூ.5 லட்சம்: மோடியிடம் ஒப்படைப்பு

pon-radhakrishnan-modi-nitin-katkari புது தில்லி: குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு வெள்ளப் பெருக்கைச் சந்தித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் மோடியிடம் வழங்கினார். பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்க வழங்கப்பட்ட காசோலையைப் பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.