
விசாகப்பட்டினத்தில் கத்தியால் போலீசை தாக்கிய குதிரை வண்டிக்காரர். விசாகப்பட்டினத்தில் குடித்துவிட்டு குதிரை வண்டிக்காரர் கொடுத்த பரபரப்பு. மது மயக்கத்தில் போலீசாரை தாக்க முயற்சி.
‘கொன்னுடுவேன்!’ என்று மிரட்டி அனைவரையும் துரத்தி அவன் செய்த அட்டகாசம்.
விசாகப்பட்டினத்தில் ஓர் அபார்ட்மென்ட் எதிரில் ‘குர்ரம் சாயி’ என்பவன் தன் குதிரை வண்டியை நிறுத்தி வைத்தான். சாலையில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று வண்டியை நகர்த்தி ஓரமாக நிறுத்தும்படி செக்யூரிட்டி கார்ட் கூறியுள்ளார். அதற்கு குதிரை வண்டிக்காரருக்கு ரோஷம் வந்து விட்டது.

செக்யூரிட்டி கார்டோடு சேர்ந்து இன்னும் இருவரை வண்டியில் இருந்த நீண்ட கத்தியை எடுத்து வந்து தாக்கினான். அதனால் அதிர்ச்சி அடைந்த உள்ளூர்வாசிகள் த்ரீடௌன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குர்ரம்சாயியை தடுப்பதற்கு முயற்சித்தனர். அவர்களையும் கத்தியால் தாக்க முயற்சித்தான் அந்த இளைஞன். அதனால் அந்த இடத்திற்கு எஸ்ஐ, சிஐ வரும்படி ஆயிற்று .

சற்று நேரம் ஆட்டம் போட்ட பின் போலீசாரிடம் பிடிபட்டான் குடிகாரன். கத்தியை கையில் பிடித்து அவன் செய்த அட்டகாசம் எல்லாம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.