
மகாராஷ்டிராவில் நிகழ்ந்த திடீர் அரசியல் திருப்பம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறும் போது, பட்நாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய இருவரும் தங்கள் தரப்பை நியாயப் படுத்தியிருக்கிறார்கள்.
மஹாராஷ்டிராவில், அஜித் பவார் கட்சி விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வரும் 30ஆம் தேதி மஹாராஷ்டிரா அரசு கவிழும் என்றார்.
மஹாராஷ்டிராவில் திடீரென நடைபெற்றுள்ள ஆட்சி அமைப்பு தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், மஹாராஷ்டிராவில் பாஜக., ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. பாஜக., ஆட்சிக்கு வந்தால் அஜித்பவாரை சிறையில் அடைப்போம் என்றார். ஆனால் பட்னவிஸ் தற்போது அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கி உள்ளார். இதில் இருந்து அஜித் பவார் மிரட்டப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. பெரும் பான்மையை நிரூபிக்க பாஜக.,வால் முடியாது என்றார்.

இதனிடையே, மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியும் சிவசேனா ஒத்துழைக்க மறுத்தது. வேறு கட்சிகளுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயன்றதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. மகாராஷ்டிராவிற்கு தேவை நிலையான ஆட்சி; கிச்சடி அரசல்ல – என்று கூறியுள்ளார் தேவேந்திர பட்நவிஸ் !
விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதால் நிலையான ஆட்சி வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார் அஜித் பவார்.